Home
Mobile

எக்ஸ்பீரியா வரிசையில் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

By Super
எக்ஸ்பீரியா வரிசையில் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

சோனி நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த 3 ஸ்மார்ட்போன்களும் எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள். எக்ஸ்பீரியா மிரோ, எக்ஸ்பீரியா டிப்போ, எக்ஸ்பீரியா டிப்போ டியூவல், என்று பெயர்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்பம் பற்றி கொஞ்சம் ஆராயலாம்.

எக்ஸ்பீரியா மிரோ என்ற இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தில் இயங்கும். 5 மெகா பிக்ஸல் மற்றும் விஜிஏ முகப்பு கேமராவிலும் புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை வழங்கும். 3.2 இஞ்ச் திரை வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

எக்ஸ்பீரியா டிப்போ மற்றும் எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. ஆனால் கூடுதலாக எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போன் 2 நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற எக்ஸ்பீரியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி தான். இதன் விலை விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X