ஸ்னாப்டிராகன் 845 & ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் அசத்தும் சோனி எச்8266.!
சோனி எச்8266 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
விரைவில் சோனி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் சோனி எச்8266 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
சோனி எச்8266 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சோனி எச்8266 மற்றும் சோனி எச்8216 ஸ்மார்ட்போன் மாடல்கள் 2018-ம் ஆண்டு துவகத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சோனி எச்8266 பொறுத்தவரை 5.84-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு டூயல் கேமரா வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோனி எச்8266 ஸ்மார்ட்போனில் 3210எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சோனி எச்8266 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications