ஆண்ட்ராய்டு ஓரியோ & 4கே டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எச்81எக்ஸ்எக்ஸ்.!

By Prakash
|

கடந்த வாரம் புதிய சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில் தற்சமயம் புதிய ஸமார்ட்போன் மாடல் ஒன்றின் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது சோனி நிறுவனம். அதன்படி சோனி விரைவில் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் சோனி அறிவித்துள்ள புதிய ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எச்81எக்ஸ்எக்ஸ்-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

 4கே டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எச்81எக்ஸ்எக்ஸ்.!

சோனி எச்81எக்ஸ்எக்ஸ் ஸ்மார்ட்போனில் அசத்தலான 4கே டிஸ்பிளே மற்றும் (2160-3840)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சோனி எச்81எக்ஸ்எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் உடன் வெளிவரும் என எதர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்இசெட் பிரீமியம் மற்றும் எக்ஸ்இசெட்1 வெற்றியை தொடர்ந்து, இந்த எச்81எக்ஸ்எக்ஸ்-ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 4கே டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எச்81எக்ஸ்எக்ஸ்.!

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் புதிய சோனி ஸ்மார்ட்போன் மாடல் 2018-ம் ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

Best Mobiles in India

English summary
Sony H81XX to come with 4K display Android Oreo and more ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X