சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே vs புதிய ஐபோன்- 4எஸ்-ஒப்பீடு

Posted By: Staff

சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே vs புதிய ஐபோன்- 4எஸ்-ஒப்பீடு
இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோன்4எஸ் மற்றும் அதற்கு சரிசமமாக மல்லுக்கட்டும் திறன் கொண்ட சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டு பார்வையை இங்கு காணலாம்.

இந்த இரண்டு மொபைல்களுமே வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போன் ஆப்பிளின் ஐஓஎஸ் 4.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது.

சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே மொபைல் 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஐபோன்-4 மொபைலில் 5 மெகா பிகஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா ப்ளே மொபைலில் 5.2 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மொபைல்களுமே 720பி துல்லியத்தில் சிறப்பான வீடியோவைக் கொடுக்கின்றது.

இரண்டு மொபைல்களுமே 1 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டது. அது மட்டும் அல்லாது 512 எம்பி ரேம் வசதியையும் பெற்றுள்ளது. எக்ஸ்பீரியா ப்ளே மொபைல் புதிய கேம் வசதிகளைக் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன்-4 ஜெஸ்சர் கேமுடன், 3டி வசதியையும் கொடுக்கிறது. இந்த வசதி ஆப்பிள் மொபைலின் தறத்தை சற்று உயர்த்திக் காட்டுகிறது.

எக்ஸ்பீரியா ப்ளே மொபைல் 4 இஞ்ச் திரை வசதி மற்றும் 850 X 480 துல்லியத்தையும் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன்-4 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதியையும், 854 X 480 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கிறது.

ஐபோன்-4 மொபைலில் 1,420 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதானால் 7 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும். சஃபேரியா ப்ளே மொபைல் 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி உள்ளதால் 8 மணி நேரம் 25 நிமிடம் டாக் டைம் வசதியையும், 400 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியையும் கொடுக்கிறது.

சோனி எரிக்சன் சஃபேரியா ப்ளே மொபைலின் விலை ரூ.29,000. ஆப்பிள் ஐபோன்-4 மொபைலின் விலை ரூ.34,500. சஃபேரியா மொபைலை விடவும், ஆப்பிள் ஐபோனின் விலை சற்று கூடுதலாகத் இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot