Home
Mobile

புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்: சோனி அறிமுகம்

By Super
புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்: சோனி அறிமுகம்
அதிக ஆற்றல்வாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் சோனி எரிக்ஸன் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் எக்ஸ்பீரியா வரிசையில் புதிய போனை சோனி எரிக்ஸன் அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பீரியா நியோ வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் 13மிமீ தடிமனும், 126கிராம் எடையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை சப்போர்ட் செய்யும். மேலும், 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்ப்பியான் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது வேகத்தில் விரட்டுகிறது.

கிராபிக்ஸ் வீடியோ படங்களை துல்லியமாக தரும் அட்ரினோ 205 ஜிபியு பிராசஸர் சப்போர்ட் மற்றும் க்யூவல்காம் எம்எஸ்எம்-8255 ஸ்நாப்டிராகன் பிராசஸர்கள் ஒன்றுக்கொன்று துணைபுரிந்து ஆன்ட்ராய்டு வி2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு துணை புரிகின்றன.

இந்த போன் 3.7 இஞ்ச் எல்இடி பேக்கலிட் எல்சிடி தொடுதிரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 480*854 பிக்செல் துல்லியத்துடன் 16ஆயிரம் நிறங்களை பிரித்தறியும் திறன் கொண்டது. இது கீறல் விழாத சோனி பிரேவியா டிஸ்பிளேயை கொண்டது. ஆட்டோ ரொட்டேட், மல்டி டச் வசதிகளை இது வழங்குகிறது.

ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட பின்புற கேமரா மற்றும் வீடியோ காலிங் செய்வதற்கான முகப்பு கேமரா ஆகியவற்றையும் பெற்றுள்ளது. ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொடர்பு வசதிகளையும் தருகிறது. இது 7.2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை தரும்.

இது 320எம்பி இன்டர்னல் சேமிப்பு திறனை கொண்டுள்ளது. மேலும், 32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதியையும் கொடுக்கும். இதில், 512 எம்பி ரேம் பொருத்தப்பட்டுள்ளது.

இதில், ஆற்றல் வாய்ந்த லிப்போ 1,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், சார்ஜ் பற்றிய கவலையை போக்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனை வரும் அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வர சோனி எரிக்ஸன் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X