புதிய எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சோனி

Posted By: Staff

புதிய எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சோனி
சோனி எரிக்ஸன் நிறுவனம் புதிய ஸ்லீக் டிசைனுடன் கூடிய சிபேரியா ஆர்க் எஸ் என்ற ஸ்மார்ட்போனை பெர்லினில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சோனி எரிக்ஸனின் பழைய போன்களைப் போல் இருந்தாலும் இந்த புதிய மொபைலுக்கு உலக அளவில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. சிபேரியாக ஆர்க் எஸ் 1.4 ஜிஹச்எஸ் ப்ராஸஸருடன் அதி விரைவாக இயங்கும் க்வல்காம் 8255டி ஸினாப்ட்ராகன் சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதன் செல்பாடு மிக பக்காவாக இருக்கிறது.

இதன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது ஒரு ஆண்டாராய்டு ஜிஞ்சர்ப்ரீட் போனாகும். மேலும் படங்களைப் பிடிப்பதற்காக 3டி ஸ்வீப் பனோரமா வசதியும் உள்ளது. மேலும் இரட்டை கேமரா வசதி இல்லாமல் 3டி படங்களை எடுக்கும் வசதியும் உள்ளது. சிபேரியா ஆர்க் எஸ்ஸின் டிஸ்ப்ளே 4.3 இன்ச் ஆகும். மேலும் இதன் டிஸ்ப்ளே எல்இடி வசதி கொண்டு 480 X 854 பிக்ஸல் ரிசலூசனை வழங்குகிறது.

இதன் வீடியோ செயல்பாட்டைப் பார்த்தால் மற்ற மொபைல்களில் இல்லாத அளவில் ப்ரேவியா என்ஜினைக் கொண்டிருக்கிறது. இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா மூலம் தரமான ஹச்டி படங்களையும் மற்றும் தரமான வீடியோ காட்சிகளையும் எடுக்க முடியும்.

மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதன் கேமராவில் சோனி எக்ஸ்மோர் ஆர் இமேஜ் சென்சார் உள்ளதால் வெளிச்சம் இல்லாத இடத்திலும் சிறப்பாக வீடியோ எடுக்க முடியும். இந்த புதிய மொபைல் சோனி நிறுவனத்தின் வேகம் நிறைந்த மொபைலாக இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும் இந்த புதிய மொபைல் மியூசிக் அன்லிமிட்டட் மற்றும் வீடியோ அன்லிமிட்டட் வசதிகளுடன் வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தும் என்று அந்நிறுவனத்தின் வர்த்தக தலைவர் கூறியிருக்கிறார்.

மியூசிக் அன்லிமிட்டட் மற்றும் வீடியோ அன்லிமிட்டட் வசதிகள் ஒருசில நாடுகளில் மட்டுமே கிடைக்கும். இந்த மீயூசிக் அன்லிமிட்டட் வசதி மூலம் பல்லாயிரம் மீயூசிக் பைல்களிலிருந்து ப்ரவுஸ் செய்ய முடியும். மேலும் வீடியோ அன்லிமிட்டட் வசதி மூலம் இலவசமாக ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர்ஸ், தலைசிறந்த படங்கள் மற்றும் நமக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளைக் காண முடியும்.

சிபேரியா ஆர்க் எஸ் மொபைல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot