புதிய சோனி எரிக்ஸன் டெக்ஸ்ட் மொபைல்!

மொபைல் என்பது இன்றளவில் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மட்டுமின்றி இருந்த இடத்திலிருந்தே அனைத்து தகவல்களையும் பெறும் வசதிகளை மொபைல்கள்
கொடு்ககின்றன.
உலக நிகழ்வுகள் மற்றும் ஏராளமான தகவல்களை தெரிந்து கொள்ள உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் பெரிதும் உதவி புரிகின்றன. இந்த நிலையில், தகவல் தொடர்பு வசதிகளை தரும் மொபைல்களில் சுலபமாக டைப் செய்யும் வசதியை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, டைப் செய்வதற்கு எளிதாக உள்ள கிவெர்ட்டி கீபேடுகள் கொண்ட மொபைல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றன.இந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் புதிய டெக்ஸ்ட் வரிசை மொபைலை சோனி எரிக்ஸன் அறிமுகம் செய்தது.
டைப் செய்வதற்கு எளிதாக கிவெர்ட்டி கீபேட் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி கொண்ட இந்த மொபைல் 2.55 இஞ்ச் எல்சிடி திரையை கொண்டிருக்கிறது. இந்த டெக்ஸ்ட் மொபைலில் 3.15 கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் சிறந்த புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.
கண்கவரும் விதத்தில் ப்ளாக், வைட், ப்ளூ போன்ற கலர்களுடன் இந்த மொபைல் வெளி வந்துள்ளது. விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த சோனி எரிக்சன் டெக்ஸ்ட் மொபைல் ரூ.10,000 .
விலைக்கு குறைவாக கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications