எந்த சவாலையும் சந்திக்க இந்த சோனி போன் ரெடி!

By Super
|
எந்த சவாலையும் சந்திக்க இந்த சோனி போன் ரெடி!

போட்டா போட்டி என்று போய் கொண்டிருக்கிறது மொபைல் உலகம். இந்த போட்டியை சந்திக்க தயாராக இருக்கிறது சோனி எரிக்சன் நிறுவனம். எஸ்டி-25-ஐ என்ற புதிய ஸ்மார்ட்போன் மொபைல் மார்கெட்டில் ஹிட் கொடுக்க இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அருமையான தொழில் நுட்பங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது என்ற நிலையில், இதில் உள்ள சவுகரியங்களை பற்றி பார்ப்போம். எஸ்டி-25-ஐ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தை கொண்டது.

இதில் டியூவல் கோர்-1 ஜிகாபெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ-8 பிராசஸரும் மற்றும் நோவாதோர் யூ-8500 தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் 3.5 இஞ்ச் திரை 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். இந்த திரை லெட் பேக்லிட் எல்சிடி தொழில் நுட்பத்தை வழங்கும். எஸ்டி-25-ஐ காம்குவட் ஸ்மார்ட்போனின் அகன்ற திரை 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.

புதிய வசதிகளுடன் வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கும். இதில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது. 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் ஆற்றல் வாய்ந்த பேட்டரியை வழங்கும். இதனால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமையும் வழங்கும்.

எஸ்டி-25-ஐ காம்குவட் ஸ்மார்ட்போன் மற்ற ஸ்மார்ட்போனுக்கு ஒரு போட்டியாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் நாளும், இதன் விலையும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X