புதிய உயர்ரக ஸ்மார்ட்போன்: சோனி எரிக்ஸன் களமிறக்குகிறது

By Super
|
புதிய உயர்ரக ஸ்மார்ட்போன்: சோனி எரிக்ஸன் களமிறக்குகிறது
டியூவல் கோர் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையை கலக்கி வருகின்றன. இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொள்ள சோனி எரிக்ஸன் முடிவு செய்துள்ளது.

நோஸோமி என்ற பெயரில் டியூவல் கோர் பிராசஸருடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த சோனி திட்டமிட்டுள்ளது. (நோசோமி என்றால் ஜப்பானிய மொழியில் நம்பிக்கை என்று பொருள்).

நம்பகத்தன்மையைப் பெயரிலேயே சூட்டியிருக்கிறது இந்த புதிய மாடல். சோனி எரிக்சனின் நோசோமி மாடல் ஐ போன் 4,சேம்சங் கேலக்ஸி 2 மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ளது என்று கூறலாம்.

உங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய வடிவம். இந்த மாடல் அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதன் தனித்துவமும் அதிகம் என்று கூறலாம்.

இத்தகைய தொழில் நுட்பம் கொண்ட சோனி எரிக்சன் நோசோமி மாடல் வருகிற ஆண்டு வெளியாக உள்ளது. அதற்குள் ஏராளமான மாடல் விற்பனைக்கு வந்துவிடும். ஆனாலும், நோசோமிக்கு நல்ல வரவேற்பு இருக்கம் என்று நிச்சயம் கூறமுடியும்.

மற்ற போட்டியாளர்களுக்கு இது மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனி எரிக்சன் நோசோனி மாடல் பார்தாலே வாங்கத்தூண்டும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வளைவு நெளிவுகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் ஆடம்பரத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப் புலமை வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேன்டி பார் மாடல் நோசோனி ஹெச்டி டிஸ்ப்லே ஃபர்ஸ்ட் கலாஸ் வசதியைக் கொண்டுள்ளது.

1280 X 720 பிக்செல்ஸ் மேக்ஸிமம் ரிவல்யூஷன் கொண்டது.16 எம் களரையும்,342 பிபிஐ டென்சிட்டி வசதியையும் கொண்டது. ஆப்பில் நியூ ஐப்பேட் ரெட்டினா டிஸ்ப்ளேவையும் விட சோனி எரிக்சனின் நோசோமி சிறப்பாக உள்ளது என்று கூறலாம்.

நோசோமி மாடலில் 1.5 ஜிஹெச்சட் கோர் பிராசஸர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிப்பியூ மூலம்,இந்த ஹேண்செட்டிற்கு 1ஜிபி ரேம் வசதி கிடைக்கிறது என்று இந்நிறுவனம் கூறிகிறது.

நெட்வர்க் ஜிஎஸ்எம் 850,900,1800,1900 எம்ஹெச்சட் மற்றும் யூஎம்டிஎஸ்/ஹெச்எஸ்பிஏ 800, 850, 900, 1900, 2100 எம்ஹெச்சட் போன்ற வசதிகளுக்கு,2ஜி மற்றும் 3ஜி நெட்வர்க் சப்போர்ட் செய்கிறது.

ஆட்டோ ரோட்டேட் செய்வதற்காக இதில் ஏக்ஸிலரோமீட்டர் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். சோனி எரிக்சனின் நோசோமி மாடலில் வெப்கிட் பிரவ்ஸர் வசதியும் கொடுக்கப்பட்டபள்ளது.

ஹெச்டிஎம்எல் காம்பாட்டிபிலிட்டி மற்றும் இதில் ஃபளாஷ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.இதில் ரியர் மற்றும் முகப்புக் கேமிராப் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் ஹெச்டி வீடியோ ரீக்கார்டிங் வசதி உள்ளது. இதில் ஜிபிஆர்எஸ்,எட்ஜ்,802.11 வைபை மற்றும் ஏ 2 டிபி 2.1 வெர்ஷன் புளூடூத்,நியோ ரீடர் பார் கோட் ஸ்கேனர்,வைஸ்பைலட் நேவிகேஷன்,டிராக் ஐடி ம்யூசிக்,ஹெச்டிஎம்ஐ போர்ட்,டிவி,ஏ-ஜிபிஎஸ் போன்ற வசதிகளையும் இந்த மாடல் அல்லித்தருகின்றது.

ஆடியோவுக்கும்,வீடியோவுக்கும் இதில் உள்ள மீடியாப்பேளேயர் சப்போர்ட் செய்கிறது. 1750 எம்ஏஹெச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டது.இதனுடைய மெமரி வசதியை 32 ஜிபி மேல் விரிவுபடுத்தமுடியாது.

இந்த மாடல் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,000 இருக்குமென்று கருதப்படுகிறது.இதை விடவும் குறையலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X