எல்இடி பிளாஷ் கொண்ட சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா டூவோ

Posted By: Staff

எல்இடி பிளாஷ் கொண்ட சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா டூவோ
மும்பை: சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா டூவோ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்மார்ட்போன் பிரிவில் அன்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சோனி எரிக்ஸன். மொபைல்போன் இன்டஸ்ட்ரியில் நிலையாக நிலைத்து நிற்க முடிவு செய்துள்ளது. தான் தயாரிக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. போட்டியை சமாளிக்கும் நம்பிக்கை கொண்டு இந்திய செல்போன் சந்தையில் ஒரு வலுவான நிலையை அடைய பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கு வரவிருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் பற்றி பார்க்கலாம். அந்த புதிய மாடலுக்கு சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா டூவோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் கொண்ட அந்த புதிய போன் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது 4.5 இன்ச் டிஎப்டி கெபாசிடிவ் ஸ்கிரீன் கொண்டது. அதில் லேட்டஸ்ட் மல்டிமீடியா பொழுபோக்கு அம்சங்களான மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர், கேமிங் சப்போர்ட், ஆடியோ ஜாக் உள்ளன. மேலும் புளூடூத், ஒய்-பை, யூஎஸ்பி பிசி சின்க், 3ஜி, ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற பல வசதிகள் உள்ளன.

சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா டூவோ அம்சங்கள் பின் வருமாறு,

ஆன்ட்ராய்ட் 2.3 ஜின்ஜர்பிரட் ஓஎஸ்

சூப்பர்பாஸ்ட் புராசசர்

எல்இடி பிளாஷ் கொண்ட 8 மெகா பிக்சல் ரியர் கேமரா

புளூடூத் 3.0

1080பி வீடியோ ரெக்கார்டிங்

ஒய்-பை

ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ்

அதிகபட்சமாக 21 எம்பிபிஎஸ் வேகமுள்ள 3ஜி இன்டர்நெட்

மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்

வீடியோ காலிங் செய்ய விஜிஏ பிரன்ட் கேமரா

ஜிபிஎஸ் சப்போர்ட்

புதிய போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சந்தையில் நிலவும் கடும்போட்டியை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்