விரைவில் சோனி எரிக்ஸனின் புதிய ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா டூவோ

Posted By: Staff

விரைவில் சோனி எரிக்ஸனின் புதிய ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா டூவோ
டெல்லி: மார்க்கெட்டில் புதிய மொபைல்போன் வருகிறது என்றவுடனேயே யூகத்தகவல்களும் இன்டர்நெட்டில் உலவ துவங்கிவிடுவது வாடிக்கை.

அதிலும், முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் என்றால், சொல்லவே வேண்டாம், தங்களால் முடிந்த அளவுக்கு போனை பற்றி தங்கள் கற்பனைக்கு எட்டியவரை கதை திரித்து இன்டர்நெட் காற்றில் பறக்கவிடுகின்றனர்.

இதுபோன்றே, தற்போது இணையதள உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போன் சோனி எரிக்ஸன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள டூவோ.

யூகத்தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முன்கூட்டியே இந்த போனை பத்திரிக்கை போட்டோகிராபர் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது சோனி எரிக்ஸன்.

சிக்கென கவர்ச்சியான வடிவமைப்பை கொண்டுள்ள டூவோ ஹைஎண்ட் என்று கூறப்படும் உயர்ரக ஸ்மார்ட்போன் சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொள்கிறது.

4.5 இஞ்ச் கொண்ட மிக விசாலமான டிஸ்பிளேயில் அப்ளிகேஷன்களை இயக்குவது வெகு சுலபமாக இருக்கும். சோனியின் ஹைடெபினிஷன் பிரேவியா எஞ்சின் கொண்ட டிஸ்பிளே என்பதால், அப்படியொரு துல்லியத்தை ஸ்கிரீனில் காண முடிகிறது.

1.4 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட க்யூவல்காம் ட்யூவல் பிராசஸர் அப்ளிகேஷன்களை இயக்கும் வேகத்தில், நம் விரல்களை சுறுசுறுப்பாக்கும்.

ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஆற்றல்வாய்ந்த 12 மெகாபிக்செல் கேமரா, எக்ஸ்பீரியா டூவோவுக்கு பலம் சேர்க்கிறது.

இதில், சக்திவாய்ந்த 2,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், சார்ஜ் பற்றிய கவலையை துரத்துகிறது.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் எக்ஸ்பீரியா டூவோவை வரும் செப்டம்பர் மாதத்தில் சந்தையில் களமிறக்க சோனி திட்டமிட்டுள்ளதாக மொபைல்போன் சந்தை கிசுகிசுக்கிறது. விலை விபரங்களை தெரிந்துகொள்ள கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot