Home
Mobile

சோனி எரிக்ஸனின் புதிய மியூசிக் கான்செப்ட் போன்கள்

By Super
சோனி எரிக்ஸனின் புதிய மியூசிக் கான்செப்ட் போன்கள்
சிறந்த இரண்டு வாக்மேன் போன்களை வழங்க உள்ளது சோனி எரிக்சன் நிறுவனம். சோனி எரிக்சன் லைவ் மற்றும் சோனி எரிக்சன் மிக்ஸ் என்பதே அந்த வாக்மேன் போன்களாகும். இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இப்பொழுது காணலாம்.

சோனி எரிக்சன் மிக்ஸ் வாக்மேன் போனில் 3 ஜி காம்பாட்டிபிலிட்டி இல்லை. ஆனால் சோனி எரிக்சன் லைவ் வாக்மேன் போனில் 3 ஜி காம்பாட்டிபிலிட்டி உள்ளது. அது மட்டும் அல்லாது இதில் ஜிப்பிஆர்ஏஸ், எட்ஜ், வைபை போன்ற வசதிகளும் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

சோனி எரிக்சன் லைவ் 115 கிராம் எடை கொண்டது. சோனி எரிக்சன் மிகஸ் வெறும் 88 கிராம் இலகு எடையைக் கொண்டது. இதனால் இதனைப் கையாள்வது மிகவும் எளிதான ஒன்றாகத் தெரிகிறது. சோனி எரிக்சன் லைவ் 3.2 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதி கொண்டது.

இதனால் இயக்கும் பொழுது மிகவும் எளிதாகவும், வசதியாகவும் ஆப்பரேட் செய்யலாம். சோனி மிக்ஸ் மாடலில் 3 இஞ்ச் வசதி கொண்ட தொடுதிரை வசதி மட்டுமே உள்ளது. சோனி எரிக்சன் லைவ் மாடலில் உள்ளதையும் விட சோனி எரிக்சன் மிக்ஸ் மாடலில் உள்ள திரை அகலம் சிறிதுதான். ஆனாலும் இதில் காட்சிகளை எளிதாகக் காண முடியும்.

இந்த இரண்டு மாடலிலுமே ஆக்சிலரோமீட்டர் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார் வசதி உள்ளது. சோனி எரிக்சன் லைவ், சோனி எரிக்சன் மிக்ஸ் இரண்டுமே மைக்ரோ எஸ்டி கார்ட் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதனை 32 ஜிபி வரை வேண்டுமானாலும் அதிகரித்துக்கொள்ளலாம்.

லைவ் மற்றும் மிக்ஸ் இரண்டிலுமே வி2.1 ஏ2டிப்பி மூலம் புளூடூத் வசதியினைப் பெற முடியும். அதுவும் மிகவும் வேகமான முறையில் தகவல்களைப் பரிமாரிக்கொள்ளலாம். இந்த இரண்டிலுமே ஆடிபிலிட்டிக்காக சிறந்த தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு வசதியும் உண்டு.

3.5 மி.மீ எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹெட்போன் ஜேக் வசதிகள் உள்ளன. கேமரா விஷயத்திலும் சோனி எரிக்சன் லைவ், சோனி எரிக்சன் மிக்ஸ் மாடலைவிடவும் சற்று சிறந்ததாகத் தெரிகிறது. லைவ் போன் 5 மெகா பிக்ஸல் லெட் ப்ளாஷ் கேமரா மற்றும் 2592 X 1944 பிக்ஸல் ரிசல்யூஷனும் கொண்டுள்ளது.

இதன் மூலம் துல்லியமான புகைப்படத்தை அள்ளி வழங்குகிறது. சோனி எரிக்சன் மிகஸ் மாடல் 3.2 மொ பிக்ஸல் கேமிராவைக் கொண்டுள்ளது. லைவ் மாடலை விட சோனி மிக்ஸ் குறைவான பிக்சல் கேமிராவைக் கொண்டிருந்தாலும், இது துல்லியமான புகைப்படத்தை வழங்குறது என்பதில் எந்தநித சந்தேகமும் இல்லை. அதோடு இதில் செகன்டரிக் கேமரா பொருத்தப்படவில்லை.

சோனி லைவ் வாக்மேன் போனில் வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதிக்காக விஜிஏ முகப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. லைவ் மாடல் 2.3.4 வெர்ஷன் ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. அதோடு இதில் 1ஜிஎச்இசட் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சோனி எரிக்சன் லைவ் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சோனி எரிக்சன் மிக்ஸ் பிளாக் வித் பின்ங்க் க்ளவுட் பேன்ட், ப்ளாக் வித் பின்ங்க் பேன்ட், ப்ளாக் வித் கிரீன் பேன்ட் போன்ற நிறத்தில், மிகவும் அழகானத் தோற்றத்தில் உள்ளன. லைவ் மாடலில் 1200 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 14 மணி நேரம் டாக் டைம் மற்றும் 17 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் டைம் கொடுக்கின்றது. அதோடு 600/800 மணி நேரம் ஸ்டான்பை டைமும் வழங்குகிறது.

இதில் உயர்ந்த தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் 2ஜி மற்றும் 3ஜி வசதியினையும் எளிதில் பெற முடியும். சோனி எரிக்சன் மிக்ஸ் 1000 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் டைம், 10 மணி நேரம் டாக் டைம், 465 மணி நேரம் ஸ்டான்பை டாக் டைமும் கொடுக்கின்றது. சோனி எரிக்சன் லைவ் ரூ.22,000 இருக்கும் என்றும் சோனி எரிக்சன் மிக்ஸ் ரூ.10,000 விலையை விட குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X