போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?

|

விவோ நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Vivo X90 Pro முன்னதாகவே சீன சந்தையில் நவம்பர் 2022 முதல் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நிறுவனம் Vivo X90 இன் வெண்ணிலா பதிப்புடன் Vivo X90 ப்ரோ ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பல்வேறு மேம்பட்ட அம்சங்கள்

Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் இதன் 1-இன்ச் கேமரா சென்சார் ஆகும். இதில் பெரிய அளவிலான வளைந்த AMOLED பேனல் இடம்பெர்றிருக்கிறது. அதேபோல் டைமென்சிட்டி ஃபிளாக்ஷிப் ப்ராசசர், ஹார்டுவேர் V2 இமேஜிங் சிப் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் என அனைத்து அம்சங்களும் உச்சக்கட்ட வகையில் இருக்கிறது.

1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?

Vivo X90 Pro சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் முழு HD+ டிஸ்ப்ளே, HDR10+ ஆதரவு, 452 PPI மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய வளைந்த 6.78-இன்ச் 10-பிட் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1300 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Vivo X90 Pro ஆனது அதன் அடிப்படை மாடலான விவோ எக்ஸ்90 போன்றே மீடியாடெக் டைமன்சிட்டி 9200 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது ஆக்டோ கோர் செயலி ஆகும்.

1-இன்ச் சோனி கேமரா

Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 50MP Sony IMX989 1-இன்ச் ப்ரைமரி ஷூட்டர் முதன்மை கேமராவாக பொருத்தப்பட்டிருக்கிறது. 1 இன்ச் சோனி கேமரா என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். டிஜிட்டல் கேமரா தரத்தில் புகைப்படங்களை பதிவு செய்ய முடியும். இதன் முதன்மை கேமரா அபெர்ச்சர் மற்றும் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவைக் கொண்டிருக்கிறது.

V2 இமேஜிங் சிப் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 12MP IMX663 அல்ட்ராவைட் ஷூட்டர் இரண்டாம் நிலை கேமராவாகவும் 50MP டெலிபிஹோடோ 758 பெர் IMX75 ஆப்டிகல் ஜூம் மூன்றாம் நிலை கேமராவாகவும் பொருத்தப்பட்டிருக்கிறது. Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோகால் ஆதரவுக்கு என 32எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. கேமராக்கள் Zeiss பிராண்டட் ஆதரவையும் V2 இமேஜிங் சிப் ஆதரவையும் கொண்டிருக்கிறது.

1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?

120W வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ, aptX-HD, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP68 சான்றிதழ், NFC, IR, 5G, Wi-Fi 6, ப்ளூடூத் v5.3 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. USB Type-C போர்ட் ஆதரவு இதில் உள்ளது. Vivo X90 Pro ஆனது 120W வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 4870mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Vivo X90 Pro: விலை

Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் MYR 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.95,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Q2 2023 இல் இதைவிட குறைந்த விலையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Sony 1-inch Camera Sensor Supported Vivo X90 Pro Launched Globally! Price and Full Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X