இந்தியா: மே 7: மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வரும் மே 7-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் மடிக்கக்கூடிய சாம்சங் போனின் விற்பனை ஏப்ரல் 15ம் தேதி
தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கேலக்ஸி போல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போதே அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.ஜே கோ கேலக்ஸி ஃபோல்டு மாடர் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்தார். மேலும் ஸ்பேஸ் சில்வர்,
காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இந்த கேலக்ஸி ஃபோல்டு சாதனத்தில் 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியுடன்
வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
கேலக்ஸி ஃபோல்டு சாதனத்தில் 16எம்பி +12எம்பி + 10எம்பி என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 10எம்பி + 8எம்பி செல்பீ கேமராக்கள், எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் போன்றவை இவற்றுள்
அடக்கம்.

சேமிப்பு:
இந்த கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக ஏகேஜி டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் அம்சங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-விலை
இந்த ஸ்மார்ட்போனில் 4380எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கேலக்ஸி ஃபோல்டு போனின் இந்திய விலை மதிப்பு ரூ.1,40,760-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications