சொல்லிட்டாங்க.. Nothing Phone 4a, Phone 4a Pro-வின் Chipset இதுதான்.. அப்போ விலை?
வருகிற மார்ச் 5 ஆம் அன்று, லண்டனை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் ஆன நத்திங், இந்தியாவில் அதன் நத்திங் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) மற்றும் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) என்கிற இரண்டு மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டிற்கு முன்னதாக, நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களை "டீஸ்" செய்ய தொடங்கியுள்ளது. அதனொரு பகுதியாக எக்ஸ் தளம் வழியாக, கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம் ஆனது நத்திங் போன் 4ஏ சீரீஸில் ஸ்னாப்டிராகன் சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும், எஸ்ஓசி (SoC) இன் சரியான பெயர் இன்னமும் மறைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் அது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Octa core Snapdragon 7s Gen 4) சிப்செட் ஆக இருக்கலாம். இது 2.71GHz பீக் க்ளாக்ட்டு ஸ்பீடை வழங்கக்கூடும் என்றும் முந்தைய அறிக்கைகள் தெரிவித்ததை ஓரளவு உறுதிப்படுத்துகிறது. மேலும் நத்திங் போன் 4ஏ சீரீஸில் 5,400mAh பேட்டரி, 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 6.7-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை பொறுத்தவரை 8GB + 128GB மற்றும் 12GB + 256GB உடன் வரும் நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல் ஆனது முறையே EUR 499 (தோராயமாக ரூ.54,000) மற்றும் EUR 569 (தோராயமாக ரூ.61,000) என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன் பிளாக், சில்வர் மற்றும் பிங்க் கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
மறுகையில் உள்ள நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் EUR 409 (தோராயமாக ரூ.44,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷனின் விலை EUR 449 (தோராயமாக ரூ.48,000) ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உலகளவில் பிளாக், ப்ளூ, பிங்க் மற்றும் ஒயிட் கலர்களில் விற்பனைக்கு வரலாம்.
முன்னதாக அறிமுகமான நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு மைக்ரோ-எல்இடி டிஸ்பிளே உள்ளது. அது கிளிப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) என்று அழைக்கப்படுகிறது. இது ஐபி68 ரேட்டிங் உடன் வருகிறது. கடைசியாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு 5 ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








