"வெயிட்டிங் ஓவர்" புதிய சிப்செட் உடன் களமிறங்கிய Moto X40! கடுகளவு கூட யோசிக்க வேணாம்.!

|

மோட்டோ நிறுவனம் அதன் எக்ஸ் தொடரின் கீழ் Moto X40 ஸ்மார்ட்போனை அதன் முதன்மை மாடல் போனாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் கூடிய குவால்காம் இன் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

Moto X40 6.7 இன்ச் முழு எச்டி+ வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 165 ஹெர்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 60 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்புக்கு என ஐபி68 மதிப்பீடு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MyUI 5.0 மூலம் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.

Moto X40 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் லெனோவா சீனா ஸ்டோரில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. இதன் அடிப்படை வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 3,399 (தோராயமாக ரூ.40,000) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 3,699 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 3,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இதன் உயர்நிலை வேரியண்ட் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,299 ஆகவும் இருக்கிறது.

இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் Smoky Black மற்றும் Tourmaline Blue வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் 22 முதல் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto X40 சிறப்பம்சங்கள்

Moto X40 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MyUI 5.0 அவுட்-ஆஃப்-பாக்ஸ் மூலம் இயங்குகிறது. அதேபோல் Moto X40 ஸ்மார்ட்போனானது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவுடன் கூடிய அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பக ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Moto X40 ஸ்மார்ட்போனானது டூயல் சிம் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். Wi-Fi 6E மற்றும் Bluetooth v5.3 ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. ஆற்றல் நுகர்வை குறைக்கக்கூடிய நிறுவனத்தின் MAXE தொழில்நுட்பம் இதில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதேபோல் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்கு என இதில் 11 அடுக்கு குளிரூட்டும் அமைப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களையும் மேம்படுத்தி வழங்கி இருக்கிறது மோட்டோ. அதாவது இந்த மோட்டோ எக்ஸ் 40 ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

50 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவும், 12 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மூன்றாம் நிலை கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 60 எம்பி கேமரா இருக்கிறது.

Moto X40 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை 7 நிமிடத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 15W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Snapdragon 8 Gen 2 SoC Powered Moto X40 Smartphone Launched: Get Ready to Buy a Premium Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X