பிளிப்கார்டில் வெளியாகியுள்ள புதிய ஸ்மார்ட்ரான் srt.போனின் சிறப்பம்சங்கள்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன, கொரிய நிறுவனங்களின் ஆக்கிரமப்பு அதிகம் இருக்கும் நிலையில் உள்ளூர் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸ்மார்ட்ரான் நிறுவனமும் தனது புதிய தயாரிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. srt.போன் என்றும் அழைக்கப்படும் இந்த போனில் சச்சின் தெண்டுல்கர் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் இன்னும் பல புதிய மாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்டில் வெளியாகியுள்ள புதிய ஸ்மார்ட்ரான் srt.போனின் சிறப்பம்சங்

இந்த ஸ்மார்ட்ரான் srt.போன் இரண்டு விதங்களில் வெளிவந்துள்ளது. 32GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.12,999 விலையும், 64GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.13,999 விலையிலும் வெளிவந்துள்ள இந்த போன் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் வகையில் உள்ளது. மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் உங்கள் பழைய போனுக்கு ரூ.1500 விலையை கழித்து கொண்டு இந்த srt.போனை வழங்கவும் செய்கிறது.

அதுமட்டுமின்றி இந்த போனின் பின்புறம் ரூ.599 மதிப்புள சச்சின் தெண்டுல்கரின் கவர் ஒன்று இலவசமாகவும் வழங்கப்படுகிறது. மேலும் தவணை முறை சலுகை, ஒருவருட வாரண்டி ஆகிய சலுகைகளும் உண்டு. இனி இந்த போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பதை பார்ப்போம்

FDH டிஸ்ப்ளே:

FDH டிஸ்ப்ளே:

ஸ்மார்ட்ரான் srt.போனின் டிஸ்ப்ளே இதற்கு முந்தைய மாடலின் ஸ்மார்ட்போன் போலவே உள்ளது. அதாவது 5.5 இன்ச் FHD 1920x1080 பிக்சலில் இந்த போனின் டிஸ்ப்ளே உள்ளது.

இரண்டு விதமான ஸ்டோரேஜ் போன்:

இரண்டு விதமான ஸ்டோரேஜ் போன்:

ஸ்மார்ட்ரான் srt.போனில் ஸ்னாப்டிராகன் 652SoC அம்சத்துடன் 4GB ரேம் மற்றும் அட்ரெனோ 510 கிராபிக்ஸ் யூனிட் உள்ளது. மேலும் இந்த போன் இரண்டு விதமாக அதாவது 32GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.12,999 விலையும், 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனாக வெளிவந்துள்ளது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் பெறும் வசதியும் உண்டு

ஆண்ட்ராய்டு நெளகட்:

ஆண்ட்ராய்டு நெளகட்:

கடந்த சில மாதங்களாக வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே கிட்டத்தட்ட ஆண்ட்ராய்டு நெளகட் நிலையில் வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட்ரான் srt.போனும் அதே ஆண்ட்ராய்டு நெளகட்டில் தான் வெளிவந்துள்ளது.

மேலும் மற்ற போன்களை விட இந்த போன் 30% அதிவேகமாக செயல்படும் என்றும் நம்பிக்கை ஊட்டப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் வகைகளில் இது லேட்டஸ்ட் என்பதால் நிச்சயம் வேகமாக செயல்படுவதற்கு கியாரண்டி கொடுக்கப்படுகிறது.

ஜியோவின் அடுத்த சர்ப்ரைஸ் : 2ஜி, 3ஜி, 4ஜி, லேப்டாப் பயனாளிகளுக்கு குஷி.!ஜியோவின் அடுத்த சர்ப்ரைஸ் : 2ஜி, 3ஜி, 4ஜி, லேப்டாப் பயனாளிகளுக்கு குஷி.!

கேமிரா:

கேமிரா:

ஒரு புதிய போன் ரிலீஸ் ஆனால் பெரும்பாலானோர் பார்ப்பது கேமிராவின் தன்மை தான். அந்த வகையில் இந்த போனில் 13MP பின்கேமிராவுடன் PDAF, f/2.0 மற்றும் LED பிளாஷ் உள்ளது. அதேபோல் 5MP செல்பி கேமிராவுடன் வைட் லென்ஸ் உள்ளதால் மிக அதிகமானோர்களுடன் செல்பி எடுக்கலாம்.

வேறு என்ன சிறப்பு அம்சங்கள்?

வேறு என்ன சிறப்பு அம்சங்கள்?

மேலும் இந்த போனில் 4G VoLET, புளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் NFC ஆகியவைகளுடன் டூயல் சிம், யூஎஸ்பி டைப் C ஆகியவையும் உள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்ரான் srt.போனில் 3000 mAh தன்மை இருப்பதால் வேகமாக சார்ஜ் ஆகும். மேலும் இந்த போனின் பேட்டரியை மிக எளிதில் வெளியே எடுக்கவும் செய்யலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Smartron srt.phone launched at Rs. 12,999 onwards for the 32GB storage variant.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X