108எம்பி கேமரா.. தரமான அம்சங்கள்.. ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் போன்கள்.. இதோ பட்டியல்..
தற்போது சிறந்த கேமரா வசதியைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கூறவேண்டும். இதற்குத் தகுந்தபடி பல்வேறு முன்னணி செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான கேமரா அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் தற்போது 108எம்பி கேமரா வசதியைக் கொண்ட போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 108எம்பி கேமரா கொண்ட போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,699 விலையில் கிடைக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 GPU) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது குறிப்பாக இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் 108 எம்பி (QVGA) மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் லென்ஸ் +VI லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த இன்பினிக்ஸ் போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி53 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் வாங்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி53 போன் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாக இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
மோட்டோரோலா ஜி62 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்டில் ரூ.14,999 விலையில் வாங்க முடியும். இந்த போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி62.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.43-இன்ச் டிஸ்பிளே, 108எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், மீடியாடெக் பிராஸசர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த அசத்தலான ரெட்மி போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் விரைவில் அசத்தலான 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக 108எம்பி கேமராக்கள் கொண்ட போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








