மீண்டும் விலை குறைப்பில் சாம்சங் செல்போன்கள்: சியோமியை தோற்கடிக்க திட்டமா?
இந்திய சந்தையில் சந்தை உலகத்திற்கே முக்கிய பொருளாதாரமாக விளங்குகின்றது. இந்திய சந்தையை பொறுத்த வரையில் ஏராளமான செல்போன் நிறுவனங்கள் புதிது புதிதாக நுழைந்து வருகின்றன.
இந்திய சந்தையில் சந்தை உலகத்திற்கே முக்கிய பொருளாதாரமாக விளங்குகின்றது. இந்திய சந்தையை பொறுத்த வரையில் ஏராளமான செல்போன் நிறுவனங்கள் புதிது புதிதாக நுழைந்து வருகின்றன.புதிய தொழில் நுட்பத்தில் புதிய மாடல்களை செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏராளமான செல்போன் நிறுவனங்கள் சந்தையில் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ளவும் செல்போன் நிறுவனங்கள் விலை குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்போன் நிறுவனங்கள் விலை குறைப்பு:
இந்தியாவில் முன்னணியில் உள்ள செல்போன் நிறுவனங்களான சாம்சங், நோக்கியா, மோட்டோரோலா, ஐபோன், ஹானர், சியோமி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தற்போது விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் இதன் புதிய மாடல் போன்களை புகுத்தவும் பழைய போன்களை விற்கவும் நோக்கிலேயே விலை குறைப்பு செய்யப்படுகிறது.

நோக்கியா நிறுவனம்:
நோக்கிய நிறுவனம் தற்போது கடந்த சில மாதங்களுக்கு நோக்கியா நிறுவனம் 6.1 மாடல் போனுக்கும் விலையை திடீரென குறைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது, புதிய போன்களையும் நோக்கியா நிறுவனம் சந்தைப்படுத்தியது. இந்த நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

பல்வேறு நிறுவனங்களும் விலை குறைப்பு:
இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஐபோன், மோட்டோரோலோ, ஹானர், சியோமி தங்களின் செல்போன் மாடல்களுக்கான விலையை குறைத்து கொண்டு வருகின்றனர். இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு சென்று விடக் கூடாது என்றும். சந்தையில் புதிய போன்களையும் அறிமுகம் செய்யும் நோக்கி தற்போது விலை குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி மீண்டும் விலை குறைப்பு:
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஏ6 பிளஸ் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் ரூ.2,000 விலை குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இதன் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் மார்க்கெட்டிங் யுக்தியை கையாண்டு வருகின்றது.

தற்போதைய விலை:
சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷன் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமியை தோற்கடிக்கவா? :
சாம்சங் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில், இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சியோமி நிறுவனத்தை தோற்கடிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது விலை குறைப்பு செய்து அதிக போன்களை விற்று, மீண்டும் இந்திய சந்தையில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள முனைப்போடு செயல்படுவதாக செல்போன் சந்தை ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








