Home
Mobile

எதிர்காலத்தை ஆளப்போகும் ஸ்மார்ட்போன்கள்..!

தினசரி அடிப்படையில் பல ஸ்மார்ட்போன்கள் வெளியானாலும் சில நிறுவனங்களின் கருவிகள் தான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றது. அந்த வகையில் மக்களிடம் வெற்றி பெற்ற ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தி மீண்டும் வெளியிடுவது, அந்த கருவி குறித்த எதிர்பார்ப்பை நிச்சயம் அதிகரிக்க தான் செய்யும்.

அவ்வாறு தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சந்தையில் வெளியாக இருக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 எஸ் மற்றும் 6 ப்ளஸ் கருவிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகின. இந்தாண்டு ஐபோன் 6எஸ் மற்றும் ஐஓஎஸ் 9 இயங்குதளமும் வெளியாகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதன் படி புதிய கருவியில் ஏ9 பிராசஸர், 2ஜிபி ரேம், 12 எம்பி ப்ரைமரி கேமரா, புதிய மைக்ரோபோன் மற்றும் புதிய உள்கட்டமைப்பு போன்ற அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஒன் ப்ளஸ் டூ

ஒன் ப்ளஸ் டூ

ஸ்மார்ட்போன் சந்தையை விற்பனையின் மூலம் திரும்பி பார்க்க வைத்த ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த கருவி தான் ஒன் ப்ளஸ் டூ. இந்த கருவி இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளதோடு இந்த கருவியில் 5.5 இன்ச் 2கே ஸ்கிரீன், ஆக்ஸிஜன் ஓஎஸ், மேம்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், யுஎஸ்பி டைப்-சி, கைரேகை ஸ்கேனர், 4ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் கேலக்ஸி நோட் 5

பெரும்பாலும் சாம்சங் கருவிகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை சாம்சங் நிறுவனத்தின் நோட் 5 கருவியானது ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

சியோமி

சியோமி

சியோமி நிறுவனத்தின் இரு கருவிகள் இந்தாண்டு வெளிகும் என்றும் அவை எம்4 கருவியின் அடுத்த மாடல் கருவிகளாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

எம்ஐ5 மற்றும் எம்ஐ5 ப்ளஸ்

எம்ஐ5 மற்றும் எம்ஐ5 ப்ளஸ்

எம்ஐ5 கருவியில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட், 3 அல்லது 4ஜிபி ரேம் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி, 16 எம்பி கேமராவும், எம்ஐ5ஐ கருவியில் 6 இன்ச் ஸ்கிரீன் 4ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், 16 எம்பி கேமராவும் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

எல்ஜி ஜி5

எல்ஜி ஜி5

எல்ஜி நிறுவனம் ஜி4 மாடலின் அடுத்த வகை கருவியை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த கருவி இந்தாண்டின் இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 மினி மற்றும் எஸ்6 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 மினி மற்றும் எஸ்6 ப்ளஸ்

சாம்சப் நிறுவனம் அடுத்த வகை எஸ்6 கருவிகளை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த கருவிகள் பெரும்பாலும் கேலக்ஸி எஸ் மினி மற்றும் எஸ் 6 ப்ளஸ் என்றும் இவை பெரும்பாலும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

மைக்ரோசாப்ட் லூமியா 940 எக்ஸ்எல்

மைக்ரோசாப்ட் லூமியா 940 எக்ஸ்எல்

மைக்ரோசாப்ட் கருவிகள் வெளியாகி ஒரு வருடம் ஓடிவிட்ட நிலையில் அந்நிறுவனம் தனது புதிய கருவியை வழங்க தயாராகி விட்டது. அதன் படி அந்நிறுவனம் 5.7 இன்ச் ஸ்கிரீன் கொண்ட மைக்ரோசாப்ட் லூமியா 940 எக்ஸ்எல் என்ற கருவியை வெளியிடும் என்று தெரிகின்றது.

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்

மோட்டோரோலா நிறுவனம் மூன்றாம் தலைமுறை மோட்டோ எக்ஸ் கருவிகளை இந்தாண்டு வெளியிடும் என்றும் அந்த கருவி 5.2 இன்ச் திரை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

நெக்சஸ் 5 (2015)

நெக்சஸ் 5 (2015)

கூகுள் நிறுவனத்தின் புதிய நெக்சஸ் கருவியை தயாரிக்கும் நிறுவனமே இன்னும் உறுதியாக தெரியாத நிலையில் அந்த கருவி நெக்சஸ் 5 (2015) என்றும் அதனினை எல்ஜி நிறுவனம் தயாரிப்பதாகவும், அந்த கருவியில் 5.2 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 2700 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Following are the list of some SMARTPHONES TO LOOK FORWARD TO IN 2015. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X