Home
Mobile

பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாகும் ஸ்மார்ட்போன்கள்!

By Karthikeyan
பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாகும் ஸ்மார்ட்போன்கள்!

ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அதனால் பல மருத்துவர்கள், பார்வை குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்களைப் பரிந்துரைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ள எழுத்துக்களின் அளவை 56 புள்ளி அளவிற்கு பெரிதாக்க முடியும். அதனால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பெரிய எழுத்துக்களில் வரும் இமெயில்கள் மற்றும் மற்ற எஸ்எம்எஸ்களை வாசிக்க முடியும். அதுபோல் டிஸ்ப்ளேயின் வெளிச்சத்தை அதிகரிக்கவும் முடியும். அதன் மூலம் பார்வை மங்கலானவர்கள் வெளிச்சம் அதிகான டிஸ்ப்ளேயில் உள்ளவற்றைப் பார்க்க முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த லொயோலா யுனிவர்சிட்டி சிக்காகோ ஸ்ட்ரிட்ஜ் ஸ்கூல் ஆப் மெடிசினைச் சேர்ந்த வால்டர் எம். ஜெய் கூறுகிறார்.

இதற்கான ஆய்வில் பார்வை குறைந்த 46 இளைஞர்கள் பங்கு கொண்டனர். இவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவர்களை அணுகி இருக்கின்றனர் என்றும் அவர்கள் அனைவருமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துமாறு அவர்களின் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.

அதனால் இப்போது அதிகமான பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது மருத்துவர்களை அணுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காமல் வெளியுலகிற்கு சாதிக்க வரவேண்டும் என்று ஜெய் கூறுகிறார். அவர்களில் வாழ்க்கைத் தரத்தை ஸ்மார்ட்போன்கள் உயர்த்தும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் ஆய்வுக்கு வந்திருந்த 46 பார்வை குறைபாடு உள்ளவர்களில் 11 பேர் (24 சதவீதம்) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் எல்லாம் 36 வயதிற்குட்பட்டவர்கள். 30 பேர் (65 சதவீதம்) சாதாரண செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் 67 வயதிற்குட்பட்டவர்கள். இறுதியாக 5 பேர் (11 சதவீதம்) செல்போன்களைப் பயன்படுத்துவதில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X