ஸ்மார்ட் போன் வளர்ச்சியில் இந்தியா...!

By Keerthi
|

தற்போது மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவும் வேகமாக இதில் வளர்ந்து வருகிறது எனலாம்,

மேலும், ஆண்டுக்கு ஆண்டு இதன் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இணையத்தில் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடம் கொண்டுள்ளது.

2013 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில், இதுவரை 12 கோடியே 59 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் இடத்தில் சீனா, அடுத்து அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில், மொத்த மொபைல் போன்களில் 65% என்ற அளவில் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இதனால், ஆண்டுக்கு ஆண்டு 80% என்ற அளவில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட் போன் வளர்ச்சியில் இந்தியா...!

இந்த வளர்ச்சி சீனா மற்றும் அமெரிக்காவினைக் காட்டிலும் அதிகமாகும். உலக அளவில், தற்போது நூற்றி பத்து கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில், தற்போது ஐபேட் விற்பனை ஆறு மடங்காக அதிகரித்து வருகிறது. ஐ போன் விற்பனையைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இதன் விற்பனை உள்ளது.

இணையப் பயன்பாட்டினைப் பொருத்த வரை, 2008-13 ஆண்டுகளில் 9.9 கோடி பயனாளர்கள் இருந்த நிலையில், இப்போது 17 கோடியே 45 லட்சம் பேர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 34% இந்தப் பிரிவு வளர்ந்துள்ளது.

இந்த வகையில் சீனா முதல் இடத்தில், மொத்தம் 53 கோடியே 80 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். மொத்த ஜனத்தொகையில் 40% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் இணைய ஜனத்தொகை, மொத்த ஜனத்தொகையில் 22% மட்டுமே.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X