உங்களுக்கு இதுவரை தெரிந்திராத 9 வகை சென்சாரை பற்றி பார்ப்போமா?

By Super Admin
|

தற்போதைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களே இல்லை எனலாம் புதுப்புது டெக்னாலஜியில் வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் சென்சார் ரொம்ப முக்கியம். அது என்ன சினிமாவுக்குத்தானே சென்சார் உண்டு, போனுக்கும் சென்சாரா? என்று நினைக்க வேண்டாம். இதுவேற சென்சார்.

உங்களுக்கு இதுவரை தெரிந்திராத 9 வகை சென்சாரை பற்றி பார்ப்போமா?

முதலில் சென்சார் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வேம். சென்சாரை தமிழில் உணர்வலை தொழில்நுட்பம் என்று கூறலாம். புற காரணி ஒன்றின் மூலம் தூண்டப்பட்டு, அந்த தூண்டலுக்கு ஏற்றவாறு செயல்படும் தொழில்நுட்பம்தன் சென்சார் எனப்படும். இந்த சென்சார் தொழில்நுட்பம் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கண்டிப்பாக இருக்கும்.

டோரண்ட் டவுன்லோடு ஜெயிலுக்கு அனுப்பும் : பீதியைக் கிளப்பும் விதிமுறை.!!
இனி 9 வகை முக்கிய சென்சாரை பற்றி பார்ப்போமா?

ஆக்சிலேரோமீட்டர் சென்சார்:

ஆக்சிலேரோமீட்டர் சென்சார்:

அனைத்து ஸ்மார்ட்போனிலும் உள்ள முக்கியமான சென்சார்தான் இந்த ஆக்சிலேரோமீட்டர் சென்சார். ஒரு போன் எந்த பக்கம் திரும்புகிறதோ அதற்கேற்ப டிஸ்ப்ளே செயல்படும். குறிப்பாக போர்ட்ரெய்ட்(Portrait ) நிலையில் இருந்து லேண்ட்ஸ்கேப்புக்கு (Landscape மாற உதவுவது இந்த சென்சார்தான்

லைட் சென்சார்:

லைட் சென்சார்:

வெளி வெளிச்சத்துக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் உள்ள பிரைட்னெஸ்-ஐ கூட்டவும் குறைக்கவும் செய்ய உதவும் சென்சார்தான் இந்த லைட் சென்சார்

பிராக்ஸிமிட்டி சென்சார்:

பிராக்ஸிமிட்டி சென்சார்:

அனைத்து ஸ்மார்ட்போனிலும் இருக்கும் ஒரு தொழில்நுட்பம் டச். இந்த டச்-ஐ உங்களுக்கு அழைப்பு வரும்போதும், போன் செல்லும்போதும் செயல்படாமல் இருக்க செய்யும் சென்சார்தான் இந்த பிராக்ஸிமிட்டி சென்சார். ஒருவேளை இந்த சென்சார் இல்லை என்றால் நீங்கள் போனை காதில் வைத்து பேசும்போது உங்கள் காது மொபைலின் அப்ளிகேசனில் பட்டு இயங்க ஆரம்பித்துவிடும்.

மேக்னோமீட்டர் சென்சார்:

மேக்னோமீட்டர் சென்சார்:

திசையை காட்ட உதவும் சென்சார்தான் இது. உங்கள் மொபைலில் உள்ள நேவிகேசன் ஆப்ஸ்களான கூகுள் மேப்ஸ் உள்பட ஒருசில திசைக்காட்டும் ஆப்ஸை இயங்க வைக்க உதவுகிறது இந்த சென்சார்

ஜிராஸ்கோப் சென்சார்:

ஜிராஸ்கோப் சென்சார்:

நாம் ஏற்கனவே பார்த்த ஆக்சிலேரோமீட்டர் சென்சார் செய்யும் வேலையைத்தான் இதுவும் செய்யும். ஆனால் இந்த சென்சார் நுட்பமாக வேலை செய்யும் என்பதே ஒரே ஒரு வித்தியாசம்

ஹார்ட் ரேட் சென்சார்:

ஹார்ட் ரேட் சென்சார்:

பெயருக்கேற்றவாறு இந்த சென்சார் உங்கள் ஹார்ட்டின் பீட்-ஐ ஒருசில ஆப்ஸ் உதவியால் அறிய உதவும். முதன்முதலில் இந்த சென்சாருடன் வந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்சி எஸ்5.

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்:

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்:

உங்கள் மொபைல்போனின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சென்சார் இதுதான். இதில் உங்கள் ஃபிங்கர் பிரிண்ட்டை பதிவு செய்து வைத்து கொண்டால் மீண்டும் உங்கள் ஃபிங்கரை காட்டினால்தான் போன் இயங்கும்.

பெடோமீட்டர் சென்சார்:

பெடோமீட்டர் சென்சார்:

உங்கள் இயக்கத்தில் இருந்து நீங்கள் எவ்வளவு கலோரியை இழக்கின்றீர்கள் என்பதை காட்டுவது இதுதான். உதாரணமாக நீங்கள் ஓடினால், நடந்தால், உடற்பயிற்சி செய்தால் இழக்கும் கலோரியை இது கால்குலேட் செய்து உங்களுக்கு சொல்லும்.

பாராமீட்டர் சென்சார்:

பாராமீட்டர் சென்சார்:

நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சென்சார் இது. என்ன புரியவில்லையா? இன்று மழை வருமா? வராதா? வெப்பநிலை எவ்வளவு? என்பது போன்ற தட்பவெப்ப நிலையை ஆப்ஸ்களுடன் இணைந்து இந்த சென்சார் உதவுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
A smartphone is something which cannot run without sensors and other hardware stuff. Here is the list of smartphone sensors which you might not know.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X