Home
Mobile

மோட்டோரோலா ஏட்ரிக்ஸ் vs மைல்ஸ்டோன் ஒப்பீட்டு அலசல்

By Super
மோட்டோரோலா ஏட்ரிக்ஸ் vs மைல்ஸ்டோன் ஒப்பீட்டு அலசல்
அனல் பறக்கும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில், மேலும் சூட்டை கிளப்புகிறது மோட்டோவின் ஸ்மார்ட்போன்கள். இளசுகளை குறிவைத்து அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து வருகிறது.

அதில், தற்போது மோட்டோரோலாவின் விற்பனையில் ஹாட் லிஸ்டில் இருக்கும் ஏட்ரிஸ் மற்றும் மைல்ஸ்டோன் ஸ்மார்ட்போன்களின் சிற்ப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.

ஏட்ரிக்ஸ் 4.0 இஞ்ச் எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதேவேளை, மைல்ஸ்டோன் 3.7 இஞ்ச் டச் ஸ்கிரீனை பெற்றுள்ளது. ஆனால், இது கிவெர்ட்டி கீபேடுடன் ஸ்லைடர் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு போன்களும் 5 மெகாபிக்செல் கேமராவை கொண்டுள்ளது. இது துல்லியமான புகைப்படங்களை வழங்குகிறது.

ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் உள்ளிட்ட வசதிகளும் இரண்டிற்கும் பொதுவான அம்சஙகள். டிஜிட்டல் ஜும், ஸ்மைல் டிடெக்சன் உள்ளிட்ட திறனையும் இந்த கேமரா வழங்குகிறது.

ஏட்ரிக்ஸ் போனில் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மைல்ஸ்டோனில் வீடியோ காலிங் செய்வதற்கான முகப்பு கேமரா இல்லை. ஆனால், இரண்டு போன்களிலும் ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

ஏட்ரிக்ஸ் கேமரா 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் திறனையும், மைல்ஸ்டோன் கேமரா 720பி வீடியோ ரெக்கார்டிங் திறனையும் கொடுக்கிறது. தவிர, அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ பார்மெட்டுகளை இயக்க முடியும்.

எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்களை இணைக்கும் வசதி கொண்ட 3.5 மிமீ யுனிவர்சல் ஆடியோ ஜாக்கும் இருக்கிறது.

ஏட்ரிக்ஸ் 3.0 புளூடூத்தும், மைல்ஸ்டோனில் 2.1 வெர்ஷன் புளூடூத்தும் இருக்கிறது. மேலும், இரண்டு போன்களும் 3ஜியில் 14 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்து நம்மை வியக்க வைக்கிறது.

விலையை பொறுத்தவரை இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஏட்ரிக்ஸ் ரூ.28,500 விலையிலும், மைல்ஸ்டோன் ரூ.19,000 விலையிலும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X