ஸ்மார்ட்போனின் பேட்டரியை பாதுகாக்க 6 முக்கிய அம்சங்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை என்னவெனில் முக்கியமான நேரத்தில் பேட்டரி சார்ஜ் இல்லாமல் நம்மை டென்ஷனாக்கும். என்னதான் பவர்பேங்க் வசதி தற்போது இருந்தாலும் ஸ்மார்ட்போன்களை சரியான வகையில் உபயோகித்தால் அதன் பேட்டரியை பெருமளவு சேமித்து இத்தகைய டென்ஷனில் இருந்து தப்பிக்க முடியும்.

ஸ்மார்ட்போனின் பேட்டரியை பாதுகாக்க 6 முக்கிய அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் பேட்டரியின் வாழ்நாள் காலம் பேட்டரியின் தவறோ அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள ஹார்ட்வேரின் தவறாகவோ மட்டும் இருப்பதில்லை. நாம் பயன்படுத்தும் விதத்தை பொருத்தும் பேட்டரி டவுன் ஆவது உண்டு.

நீங்கள் அதிகம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதவராக இருந்த போதிலும் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி வெகுசீக்கிரம் காலியாகிறது என்றால் உடனடியாக ஒருசில முக்கிய வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

பேட்டரி சார்ஜ் எதனால் வெகு சீக்கிரம் காலியாகிறது, அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

பிரைட்னெஸ் அளவோடு இருக்க வேண்டும்:

பிரைட்னெஸ் அளவோடு இருக்க வேண்டும்:

ஸ்மார்ட்போனின் பேட்டரியை அதிகம் சாப்பிடுவது அதில் உள்ள பிரைட்னெஸ் தான். எனவே பிரைட்னெஸ்-ஐ எப்போது அதிகமாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிக பிரைட்னெஸ் பேட்டரியை காலியாக்குவது மட்டுமின்றி கண்களுக்கும் கெடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரைட்னெஸ் செட்டிங்ஸ் சென்று குறைந்த அளவு பிரைட்னெஸ் அல்லது ஆட்டோ என்ற ஆப்சனை பயன்படுத்தவும். அதேபோல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி முடித்தவுடன் ஸ்க்ரீன் ஆப் செய்யும் நேரத்தை குறைவாக வைத்திருங்கள். அப்போதுதான் ஸ்க்ரீனை நீங்கள் மேனுவலாக ஆப் செய்ய மறந்தாலும் உடனே ஆட்டோமெட்டிக்காக ஆப் ஆகி பேட்டரியை சேமித்து கொடுக்கும்

வைஃபையை டர்ன் ஆனில் வைத்திருக்க வேண்டாம்:

வைஃபையை டர்ன் ஆனில் வைத்திருக்க வேண்டாம்:

வைஃபையை அதிகம் பயன்படுத்துவதால் உங்கள் மொபைல் பில் மட்டும் உயர்வதில்லை. உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியும் அதிகம் காலியாகும்.

வைஃபை நெட்வொர்க் இல்லாத போதும், இண்டர்நெட்டை பயன்படுத்தாத போதும், வைஃபை நெட்வொர்க்கை ஆப் செய்து வையுங்கள், வைபை ஆன் நிலையில் இருந்தால் நெட்வொர்க் இல்லாத இடங்களில் அது தானாகவே நெட்வொர்க்கை சியர்ச் செய்யும். எனவே அதன் மூலம் பேட்டரி அதிகம் காலியாவதற்கு வாய்ப்பு உண்டு.

பேக்ரவுண்டில் இயங்கும் ஆப்ஸ்களை கவனியுங்கள்:

பேக்ரவுண்டில் இயங்கும் ஆப்ஸ்களை கவனியுங்கள்:

நீங்கள் பயன்படுத்திய ஆப்ஸ்கள் அனைத்தும் பயன்படுத்தி முடிந்த பின்னரும் பேக்ரவுண்டில் இயங்கி கொண்டே இருக்கும். அதை உடனே செட்டிங்ஸ் மெனு சென்று பேக்ரவுண்டை நீக்கிவிட வேண்டும்.

இல்லாவிட்டால் பேக்ரவுண்டில் இயங்கி கொண்டிருக்கும் பல ஆப்ஸ்கள் பேட்டரியின் திறனை பயன்படுத்தி கொண்டே இருக்கும். இதனால் உங்கள் பேட்டரியின் சார்ஜ் திடீரென குறைந்துவிடும்

ஜெல்லி : உலகின் மிகச்சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!ஜெல்லி : உலகின் மிகச்சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

 பேட்டரி மேனேஜ்மெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள்:

பேட்டரி மேனேஜ்மெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள்:

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏராளமாக கொட்டி கிடக்கும் பேட்டரி மேனேஜ்மெண்ட் ஆப்ஸ்களை உபயோகப்படுத்தினால் நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் அதன் வேலை முடிந்த பின்னர் தானாகவே அதிக பயன்பாட்டை தடுத்து உங்கள் பேட்டரியை சேமிக்க உதவும்.

டேட்டா ஒத்திசை:

டேட்டா ஒத்திசை:

ஸ்மார்ட்போனில் பேட்டரி குறைவதற்கு இன்னொரு முக்கிய காரணம் ஆப்ஸ்கள் ஆட்டோமெட்டிக்காக ஒத்திசை செய்வது தான். இதனை தவிர்க்க ஆட்டோமெட்டிக் பேக்கப்-ஐ எனேபிள் செய்து வைக்கவும். இதன் மூலம் பேட்டரி வீணாகுவதை பெருமளவு தவிர்க்கலாம்

சாப்ட்வேர் அப்டேட் மிக முக்கியம்:

சாப்ட்வேர் அப்டேட் மிக முக்கியம்:

உங்கள் ஸ்மார்ட்போனில் அவ்வபோது சாப்ட்வேர் அப்டேட் செய்யும்படி நோட்டிபிகேஷன் வருவதை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு நோட்டிபிகேசன் வந்தவுடன் உடனே அப்டேட் செய்ய வேண்டும்.

அவ்வாறு அப்டேட் செய்யாமல் பழைய வெர்ஷனை பயன்படுத்தினால் பேட்டரிக்கு மட்டுமின்றி போனுக்கும் வாழ்நாள் குறைவு என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்

Best Mobiles in India

English summary
Here are some reasons that your smartphone's battery life is draining quickly. Take a look at the reasons and understand how to resolve the issue.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X