2022 இல் நின்னு விளையாண்ட ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்: அடிச்சு தூக்குங்க மக்களே!

|

2022 யாருக்கு எப்படி இருந்ததோ? Smartphone சந்தை என்பது உற்சாகமாகவும் குதூகலமாகவும் இருந்தது. பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இந்தியாவில் சமீபத்தில் 5ஜி சேவையும் அறிமுகமாகி இருக்கிறது. எனவே 5ஜி ஆதரவுடன் கூடிய பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகின. உச்ச விலையில் அறிமுகமான 5ஜி போன் சமீபகாலமாக மலிவு விலையில் அறிமுகமாகி வருகிறது. அதன்படி 2022 இன் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2022 இல் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள்

2022 இல் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன் என்றால் இப்படி தான் இருக்கும் என்ற முறை மாற்றப்பட்டு வருகிறது. வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாத் தொடங்கிவிட்டன. அம்சங்களிலும் குறை கூறிவிட முடியாது. 4கே மற்றும் 8கே வீடியோ பதிவு, சமீபத்திய மற்றும் முதன்மை தர சிப்செட், சக்திவாய்ந்த மற்றும் தெளிவுத்திறன் உடன் கூடிய ஓஎல்இடி டிஸ்ப்ளே என பல மேம்பட்ட ஆதரவுடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. அதன்படி 2022 இல் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

Asus ROG Phone 6

Asus ROG Phone 6

Asus ROG Phone 6 என்பது குவால்காம் இன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது மிகவும் சமீபத்திய மற்றும் முதன்மை சிப்செட் ஆகும். நீடித்த கேமிங் அமர்வுகளுக்கு என குளிரூட்டும் அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. ROG Phone 6 ஆனது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 1200 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் எச்டிஆர் 10+ ஆதரவுடன் கூடிய 6.78 இன்ச் 10 பிட் அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது.

கேமிங் செயல்திறன்

Asus ROG போனில் கேமிங் செயல்திறன் எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. எனவே நீங்கள் ஆல் ரவுண்டர் சாதனத்தை தேடுபவராக இருந்தால் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்காது.

Asus ROG Phone 6 விலை: ரூ.71,999

iQoo 9T

iQoo 9T

iQoo 9T ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் அம்சங்கள் ஒருங்கிணைந்து இருக்கிறது. இது ஒரு ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போனாகும். அன்றாடப் பயன்பாட்டில் புகைப்படம் எடுப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் உகந்ததாக இருக்கும். முழு எச்டி தெளிவுத்திறன் உடன் கூடிய 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

iQoo 9T கேமரா அம்சங்கள்

iQoo 9T கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனானது OIS ஆதரவு கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு கொண்ட 12 எம்பி டெலி போட்டோ ஷூட்டர் மற்றும் 13 எம்பி அல்ட்ராவைட் ஸ்னாப்பர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

iQoo 9T விலை ரூ.49,999

OnePlus 10T

OnePlus 10T

OnePlus 10T ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஓஐஎஸ் ஆதரவுடன் கூடிய 50 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என 3 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 150 வாட்ஸ் வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

OnePlus 10T விலை: ரூ.49,999

Samsung Galaxy Z Fold4

Samsung Galaxy Z Fold4

வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு Samsung Galaxy Z Fold4 சிறந்த தேர்வாக இருக்கும். புத்தகம் போல் இரண்டாக மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு முக்கிய மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

Samsung Galaxy Z Fold4 விலை

Samsung Galaxy Z Fold4 ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், எச்டிஆர் 10+மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் கூடிய 7.6 இன்ச் டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஓஐஎஸ் ஆதரவுடன் கூடிய 50 எம்பி பிரைமரி ஷூட்டர், 10 எம்பி டெலி போட்டோ சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என மூன்று கேமராக்கள் இதில் இருக்கிறது. 25 வாட்ஸ் வயர்ட் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4400 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy Z Fold4 விலை ரூ.1,54,998

Best Mobiles in India

English summary
Smartphone 2022: Let's check out the List of best and powerful smartphones launched in 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X