ரூ.13,400/-க்கு ட்ரை-பெஸல் டிசைன்; டிஸ்பிளேவின் கீழ் செல்பீ; ரியர் டூயல் கேம்.!

மேலும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி, 4ஜிபி ரேம் உடனான 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு, டூயல் 13எம்பி பின்பக்க கேமரா, ஒரு 8எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

|

ஸ்மார்டிசன் எனும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம், இந்தியர்களுக்கு வேண்டுமானால் ஒரு பிரபலமான நிறுவனமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீன சந்தையில் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும், குறிப்பாக ஸ்மார்டிசன், அதன் வித்தியாசமான ஸ்மார்ட்போன் வடிவமைப்பு மொழிக்கு நன்கு அறியப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

ரூ.13,400க்கு ட்ரை-பெஸல் டிசைன்; டிஸ்பிளேவின் கீழ் செல்பீ; டூயல் கேம்!

அப்படியான ஸ்மார்டிசன் இன்று, ஸ்மார்டிசன் நட் 3 என்கிற, அதன் 2018-ஆம் ஆண்டின் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. நட் 3 ஆனது கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்டிசன் நட் 2 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்டட வெர்ஷன் ஆகும்.

டிஸ்பிளேவின் கீழ் செல்பீ கேமரா

டிஸ்பிளேவின் கீழ் செல்பீ கேமரா

ட்ரை-பெஸல் டிசைன் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த நட் 3 ஸ்மார்ட்போன் ஆனது (ஷார்ப் அக்வாஸ் எஸ் 3 ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பு) அதன் முன்பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றை கொண்டுள்ளது. உடன் (சியோமி மி மிக்ஸ் தொடரில் இருப்பதுபோன்றே) டிஸ்பிளேவின் கீழ் வைக்கப்பட்டுள்ள செல்பீ கேமரா கொண்டுள்ளடித்து.

முதல் நிறுவனங்களில் ஸ்மார்டிசனும் ஒன்றாகும்

முதல் நிறுவனங்களில் ஸ்மார்டிசனும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வெளியான நட் 2 ஸ்மார்ட்போன், அதன் பின்னால் கைரேகை ஸ்கேனரை கொண்டிருந்ததும், தற்போது நிறுவனம், அதை முன்பக்கத்திற்கு நகர்த்த முடிவு செய்துள்ளது. இந்த இடத்தில், லோகோவின் கீழ் கைரேகை ஸ்கேனரை உட்பொதித்த முதல் நிறுவனங்களில் ஸ்மார்டிசனும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்

ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்

தற்போதுவரையிலாக, சீன சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்மார்டிசன் நட் 3 ஸ்மார்ட்போனின் இந்தியா போன்ற பிற சந்தை விற்பனை பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்- ரெட் ஒயின், கார்பன் பிளாக் மற்றும் லைட் கோல்ட், பிளாக் மற்றும் ரெட்.

டூயல் 13எம்பி பின்பக்க கேமரா

டூயல் 13எம்பி பின்பக்க கேமரா

அம்சங்களை பொறுத்தவரை, முழு எச்டி+ தெளிவுத்திறன் கொண்ட ஒரு 5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி, 4ஜிபி ரேம் உடனான 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு, டூயல் 13எம்பி பின்பக்க கேமரா, ஒரு 8எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேஸ் அன்லாக்

பேஸ் அன்லாக்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்டிசன் நிறுவனத்தின் சொந்த ஓஎஸ் 4.எக்ஸ் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. விசாட் மற்றும் அலிபே போன்ற ஆப்ஸ்களுக்கான ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறந்த பகுதியாக இதன் பத்து கைரேகைகள் வரை பதிவு செய்யும் திறன் மற்றும் பேஸ் அன்லாக் ஆதரவவை ஆகியவைகளை கொண்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை..

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை..

4ஜி LTE, VoLTE, ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 b / g / n மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மாடல் ஆனது சுமார் ரூ .13,400/-க்கும், 64ஜிபி மாடல் சுமார் ரூ.16,500/-க்கும் மற்றும் 128ஜிபி மாடல் தோராயமாக ரூ.20,600/-க்கும் வருகிற ஏப்ரல் 22 தொடங்கி சீனாவில் விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Smartisan Nut 3 With Tri-Bezel Design, Snapdragon 625 SoC Goes Official. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X