அமெரிக்காவில் வோடாஃபோனின் புதிய ஸ்மார்ட்போன்!

சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் ஸ்மார்ட்போனை பெற வேண்டும் என்றால் வோடாஃபோன் வழங்கும் ஸ்மார்ட்-II ஸ்மார்ட்போன் சரியான வாய்ப்பாக இருக்கும். தொலை தொடர்பு சேவையினை வழங்கி வரும் வோடாஃபோன் நிறுவனம் குறைந்த ஸ்மார்ட்போன்களை மட்டுமே வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஸ்மார்ட்-II என்ற புதிய ஸ்மார்ட்போனை அமெரி்க்க மொபைல் சந்தையில் வழங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரை வசதியினையும், இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 800 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசஸரையும் வழங்கும்.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை கொண்டதால், நிறைய அப்ளிக்கேஷனை இதில் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போனின் அதிகமான தொழில் நுட்ப விவரமோ அல்லது விலை விவரமோ வெளியாகவில்லை. ஆனால் வோடாஃபோனின் இந்த ஸ்மார்ட்-II ஸ்மார்ட்போன் ரூ.7,000 விலை கொண்டதாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை ஸ்மார்ட்போனை பொருத்த வரையில் குறைந்த விலையாக தான் தெரிகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாவது பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
தொலை தொடர்பு சேவையை சிறப்பாக வழங்குவதன் மூலம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடன் இருந்து சிறந்த வரவேற்பினை பெற்ற வோடாஃபோன், தனது புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையிலும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications