Home
Mobile

Slim Phone-னா இப்படி இருக்கனும்.. 1TB மெமரி, 90W சார்ஜிங்.. மார்க்கெட்டை முடிச்சுவிட்ட Moto-வின் புது போன்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் டிசைன் (Slim and light weight design) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது கடந்த சில நாட்களாக 'டீஸ்' செய்யப்பட்டு வரும் - மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ (Moto X70 Air Pro) மாடல் ஆகும்.

ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மற்றும் மோட்டோரோலா ரசிகர்கள், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புக்கு காத்திருக்கும் வேளையில், மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் (Moto X70 Air Pro entire specifications) ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது.

Slim Phone-னா இப்படி இருக்கனும்.. Moto-வின் புது போன்!

மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஇஎன்ஏஏ (TENAA) சான்றிதழ் விவரங்களின்படி, மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1264 x 2780 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் உடனான ஒரு பெரிய 6.78-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

இந்த விவரங்கள் - ஒரு கூர்மையான மற்றும் அதிவேக வியூவிங் அனுபவத்தை வழங்கும் என்பதை குறிக்கிறது. அதாவது இது மீடியா நுகர்வு மற்றும் கேமிங்கிற்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களை இலக்காக கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சிப்பால் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது பிளாக்ஷிப் பிரிவில் உறுதியாக நிலைநிறுத்திருக்கும் ஒரு சிப்செட் ஆகும்.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பல வகையான ஆப்ஷன்களில் வரும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி, 12ஜிபி மற்றும் 16ஜிபி ஆகாய ரேம் விருப்பங்களை எதிர்பார்க்கலாம். இது 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். டிஇஎன்ஏஏ பட்டியலில் விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் ஆதரவு (மைக்ரோ எஸ்டி கார்டுக்கான ஸ்லாட்) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக தெரிகிறது. மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேக் பேனலில் இது மூன்று 50-மெகாபிக்சல் சென்சார்களை கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் ஒன்று 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

பேட்டரியை பொறுத்தவரை மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை தக்கவைத்து கொள்வதற்காக 5100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இது 3சி சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது, அப்போது இது 90W சார்ஜருடன் வரும் என்கிற தகவல் கிடைத்தது. இது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிப்பதாகவும் வதந்தி பரவியுள்ளது.

சாஃப்ட்வேரை பொறுத்தவரை மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மோட்டோரோலாவின் ஹலோ யுஎக்ஸ்-ன் லேட்டஸ்ட் வெர்ஷனுடன் அனுப்பப்படலாம். அளவீடுகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 162.1 x 76.4 x 7 மிமீ அளவையும், சுமார் 187 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

இந்த அளவிலான ஸ்மார்ட்போன் - மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, ஒப்பீட்டளவில் ஸ்லிம் ஆன மற்றும் இலகுரக கட்டமைப்பை குறிக்கிறது. கடைசியாக மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக டிஸ்பிளேவில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. விலை விவரங்கள் மற்றும் சீன அறிமுகத்தை தொடர்ந்து வரும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா? என்கிற விவரங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Slim Phone Should be Like This Moto X70 Air Pro Full Specifications Leaked Launching Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X