Home
Mobile

களத்தில் குதிக்கும் புதிய எல்ஜி ஸ்மார்ட்மொபைல்!

By Super
களத்தில் குதிக்கும் புதிய எல்ஜி ஸ்மார்ட்மொபைல்!

மின்னணு சாதன உலகில் நிகழ்ந்து வரும் அனைத்து விதமான சாதனைகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கின்றன. இதற்கு எல்ஜி போன்ற மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

இந்த நவீன யுகத்தில் எல்லா மொபைல்களிலும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தபட்டு வருகின்றது. இதேபோன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் எல்ஜி ஸ்பெக்ட்ரம் என்ற ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் வெளியிட உள்ளது எல்ஜி. இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை பெற்றுள்ளது.

பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில் 4 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. தலை தான் பிரதானம் என்பது போல மொபைல்களுக்கு அதன் திரை தான் பிரதானம் என்றும் சொல்லலாம். இந்த திரை மூலமாகத்தான் மொபைல்களுக்கும் ஒரு கம்பீரம் கிடைக்கின்றது.

ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் திரையின் மூலம் 720பி திரை துல்லியத்தையும் பெறலாம். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால், இதனால் புகைப்படங்கள் ஒரு தனி தன்மை கொண்டதாக இருக்கும். வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போனின் செயல் திறனுக்கு அதன் பிராசஸர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அடிப்படையில் இதில் டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 1.5 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது.

சாதாரண சிங்கிள் கோர் பிராசஸரை காட்டிலும் இந்த பிராசஸர் இரண்டு மடங்கு அதிகமான ஆற்றலை பெற்றுள்ளது. இந்த ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனில் எல்டிஇ ரேடியோ வசதியினையும் பெறலாம்.

ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பங்களை பார்த்தால் நிச்சயம் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எல்ஜி படைப்பான இந்த ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X