Home
Mobile

கலக்கலான தோற்றத்துடன் புதிய அல்கேட்டல் ஸ்மார்ட்போன்!

By Super
கலக்கலான தோற்றத்துடன் புதிய அல்கேட்டல் ஸ்மார்ட்போன்!

தனது சிறந்த தொழில் நுட்பத்தினால் வாடிக்கையாளர்களை கவர்ந்த அல்கேட்டெல், புதிய ஓடி-918 டி என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி தர கூடிய செய்தியும் இதில் இருக்கிறகது. இந்த ஓடி-918 டி ஸ்மார்ட்மொபைல் குறைந்த விலையில் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

பொதுவாகவே அனைத்து வசதிகளையும் வழங்கும் ஸ்மார்ட்போன் என்றாலே வாங்குவோருக்கு சந்தோஷம் தான். அதிலும் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் இன்னும் பரம திருப்தியை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இந்த ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதி கொண்டது. இதன் திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கும். அதுவும் இந்த அகன்ற திரை மொபைலுக்கு ஒரு சிறப்பான தோற்றத்தையும் கொடுக்கும்.

இது கூகுள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 650 மெகாஹெர்ட்ஸ் வேகத்தை கொடுக்கும் மீடியாடெக் எம்டி 6573 பிராசஸர் கொண்டது. 3.1 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டதால் அழகான புகைப்படம் போன்ற பயன்களையும் பெறலாம்.

256எம்பி சிஸ்டம் மெமரியையும், 512எம்பி இன்டர்னல் மெமரியையும் வழங்கும். இதன் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். 48எம்பி/எஸ் வேகத்தில் தகவல்களை பரிமாறி கொள்ள இதில் 2.0 வெர்ஷன் யூஎஸ்பி மற்றும் 3.0 புளூடூத் வசதியும் உள்ளது.

மைக்ரோஎஸ்டி, மைக்ரோஎச்டிஎச்சி போன்ற மெமரிகார்டுகளையும் சப்போர்ட் செய்யும். அல்காடெல் ஓடி-918 டி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்டாக இருக்கிறது. இதில், ஏ-ஜிபிஎஸ், வைபை வசதிகளுக்கும் சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மலிவான விலை கொண்ட ஸ்மார்ட்போனாக சந்தையில் இந்த போன் கால் பதிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X