ஆர்டர் பறக்குது.. ரூ.9000 பட்ஜெட்ல புது VIVO போன்.. 6.56-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம், 50MP கேம், 5000mAh பேட்டரி!
விவோ (VIVO) நிறுவனம் சத்தம் இல்லாமல் ஒரு புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமான வேகத்தில் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனையையும் தொடங்கி விட்டது. இது என்ன மாடல்? இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸின் கீழ் விவோ ஒய்18டி (Vivo Y18t) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி54 ரேட்டிங், 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், யுனிசாக் டி612 சிப்செட், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

விவோ ஒய்18டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் நானோ சிம் ஆதரவு உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயக்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 840 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் பேக் பேனல் உடன் வரும் விவோ ஒய்18டி ஆனது யுனிசாக் டி612 சிப்செட் உடன் வருகிறது. இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்டென்டட் ரேம் அம்சமும் உள்ளது. இதன்கீழ் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 4ஜிபி ரேம்-ஐ எடுத்து, மொத்த ரேம்-ஐ 8ஜிபி ஆக விரிவுபடுத்த முடியும். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் மெமரியையும் நீட்டிக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, விவோ ஒய்18டி ஸ்மார்ட்போன் ஆனது ஃபிளாஷ் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 0.08 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 8 மெகாபிக்சல் கேமரா பூர்த்தி செய்யும்
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இதில் 4ஜி, ப்ளூடூத் 5.2, எஃப்எம் ரேடியோ, ஜீப்பில், பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), QZSS, ஓடிஜி, வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளன. சென்சார்களை பொறுத்தவரை ஆக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், மோட்டார் கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது.
மேலும் இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 மதிப்பீட்டை பெற்றுள்ளது. கடைசியாக இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 62.53 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரத்தையும், 6.8 மணிநேரம் வரை பப்ஜி பிளேபேக் நேரத்தையும் வழங்கும். அளவீடுகளை பொறுத்தவரை இது 163x75.58x8.3மிமீ மற்றும் எடையில் 185 கிராம் உள்ளது.
இந்தியாவில் விவோ ஒய்18டி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விவோ ஒய்18டி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் தற்போது விவோ இந்தியா இ-ஸ்டோர் (Vivo India e-store) மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications