Home
Mobile

பட்ஜெட் இல்ல.. சூப்பர் பட்ஜெட்! 5000mAh பேட்டரியுடன் அறிமுகமான 2 Redmi போன்கள்!

ரெட்மி பிராண்டின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான ரெட்மி ஏ1 (Redmi A1) மற்றும் ரெட்மி ஏ1 பிளஸின் (Redmi A1 Plus) மேம்படுத்ததப்பட்ட "வாரிசுகளாக" ரெட்மி ஏ2 (Redmi A2) மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ் (Redmi A2 Plus) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நினைவூட்டும் வண்ணம், ரெட்மி ஏ1, ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.5,899 மற்றும் ரூ.7499 க்கு வாங்க கிடைக்கின்றன. இந்த இரண்டுமே பட்ஜெட் வாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமான மாடல்களாகும். இந்நிலையில் தான் ரெட்மி ஏ2 மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ் மாடல்கள் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

5000mAh பேட்டரியுடன் அறிமுகமான 2 Redmi ஸ்மார்ட்போன்கள்!

ஆனால் இந்த இரண்டுமே தற்போது வரையிலாக ஐரோப்பாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ரெட்மி ஏ2 மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ் ஆகிய இரண்டுமே கூடிய விரையவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரெட்மி ஏ1 சீரிஸ் மீது இந்தியர்கள் கொடுத்த வரவேற்பும், வெற்றியும் அப்படி!

ரெட்மி ஏ2, ரெட்மி ஏ2 பிளஸ் அம்சங்கள்: இந்த 2 புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) உடன் இயங்குகின்றன. மேலும் இந்த இரண்டுமே 1600 x 720 பிக்சல் ரெசல்யூஷன், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.52-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுமே மீடியாடெக் ஹீலியோ ஜி36 (MediaTek Helio G36) ப்ராசஸர் உடன் வருகிறது. இது 3ஜிபி வரையிலான ரேம் மற்றும் 32ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளன. கேமராக்களை பொறுத்தவரை, இரண்டுமே டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன.

அதில் எல்இடி ஃபிளாஷ் உடனான 8-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ஒரு க்யூவிஜிஏ (QVGA) சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளன. அது டிஸ்பிளேவில் உள்ள டாட் டிராப் நாட்ச் வடிவமைப்பிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி ஏ2 சீரிஸின் கீழ் வரும் 2 மாடல்களுமே 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கின்றன. கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இரண்டுமே டூயல்-சிம், 4ஜி, 2.4ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎச்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை வழங்குகின்றன.

எல்லா அம்சங்களும் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில், இந்த 2 ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே என்னதான் வித்தியாசம் அல்லது வேறுபாடு என்று கேட்டால்.. ரெட்மி ஏ2 மாடலில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கிடையாது; ஆனால் மறுகையில் உள்ள ரெட்மி ஏ2 பிளஸின் பேக் பேனலில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. இதுதவிர்த்து மற்ற எல்லா அம்சங்களும் ஒரே மாதிரியே உள்ளன.

ரெட்மி ஏ2, ரெட்மி ஏ2 பிளஸ் விலை: இந்த இரண்டுமே முந்தைய மாடல்களை போலவே என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களாகும். இந்த ஸ்மார்ட்போன்கள் பிளாக், க்ரீன் மற்றும் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் மற்றும் 2ஜிபி+32ஜிபி மற்றும் 3ஜிபி+32ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன; ஆனால் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Silently Redmi Launched 2 New Entry Level Phones Check Redmi A2 and Redmi A2 Plus Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X