Home
Mobile

ஸ்பெஷல் OnePlus போன்.. சைலன்ட் ஆக இந்தியாவில் அறிமுகம்.. 16GB ரேம், 256GB ஸ்டோரேஜ், 100W சார்ஜிங்.. என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனம், சத்தமின்றி ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் எடிஷன் (OnePlus 12R Genshin Impact Edition) என்று அழைக்கப்படும் இந்த மாடலின் விலை மற்றும் அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் எடிஷன் ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது மைஹோயோவின் ஆக்ஷன் ரோல்-பிளேமிங் கேம் (MiHoYo's Action Role-playing Game) ஆன ஜென்ஷின் இம்பாக்ட் (Genshin Impact) மூலம் ஈர்க்கப்பட்ட தனித்துவமான வடிவமைப்பை (Unique design) கொண்டுள்ளது.

ஸ்பெஷல் OnePlus போன்.. சைலன்ட் ஆக இந்தியாவில் அறிமுகம்!

மேலும் இது கேமிங்கை மையப்படுத்திய ஆப்டிமைசேஷன்களுடன் (Gaming-focused Optimizations) வருகிறது மற்றும் கஸ்டமைசேஷனுக்கான கெக்கிங்-தீம் கேஸ் (Keqing-themed case for Customization) போன்ற ஆக்சஸெரீஸ்களை உள்ளடக்கிய கிஃப்ட் பாக்ஸையும் (Gift Box) கொண்டுள்ளது. இது எலக்ட்ரிக்-தீம் பினிஷ் மற்றும் பின்புறத்தில் கெகிங் (Keqing) லோகோவையும் கொண்டுள்ளது.

என்ன விலை? இந்தியாவில் இது சிங்கிள் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன் எலக்ட்ரோ வயலட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை விட இது ரூ.10000 அதிகம்!

ஸ்பெஷல் OnePlus போன்.. சைலன்ட் ஆக இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் எடிஷன் ஆனது ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்திய வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் "வழக்கமான" ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

என்னென்ன அம்சங்கள்? மேற்கண்ட தீம்-அடிப்படையிலான மற்றும் மேலோட்டமான மாற்றங்களை தவிர்த்து "வழக்கமான" ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனிற்கும் "ஸ்பெஷல் எடிஷன்" ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனிற்கும், அம்சங்கள் அடிப்படையில் எந்த வித்தியாசமும், வேறுபாடுகளும் கிடையாது, இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களையே பகிர்ந்துகொள்கின்றன.

ஸ்பெஷல் OnePlus போன்.. சைலன்ட் ஆக இந்தியாவில் அறிமுகம்!

அதாவது ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் எடிஷன் ஆனது 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கிறது, எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பையும் பெற்றுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் எடிஷன் ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐபி64 ரேடிங்கையும் ஆதரிக்கிறது.

ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் 12ஆர் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் போது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் (UFS 4.0 Storage) வரும் என்று ஒன்பிளஸ் அறிவித்திருந்தது. இருப்பினும், ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து சந்தேகம் எழுப்பினர்.

அதன் பின்னர், ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதாவது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வேரியண்ட்களுமே உண்மையில் யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் வருகின்றன என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது. அதனை தொடர்ந்து 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கியவர்களுக்கு ரீபண்ட் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தான் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Silently OnePlus Launched New phone in India Check OnePlus 12R Genshin Impact Edition Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X