இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. வெறும் ரூ.9999 க்கு 16GB ரேம், 50MP AI கேமரா.. 5000mAH பேட்டரி.. என்ன மாடல்?
அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே என்று கூறும்படியாக ஒரு அட்டகாசமான சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் நோக்கியாவின் ஜி42 5ஜி, ஆப்பிளின் ஐபோன் 15 சீரீஸ், ஹானர் 90 போன்ற ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நாம் இங்கே பேசுவது லாவா (Lava) நிறுவனத்தின் பிளேஸ் 2 ப்ரோ (Blaze 2 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 'சைலன்ட்' ஆக.. அதே சமம் விலையை மீறிய 'வயலன்ட்' ஆன அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த லாவா ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

இன்று அதாவது செப்.11, நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போன் மட்டுமே இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரூ.18,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நோக்கியா ஜி42 5ஜி ஆனது வெறும் ரூ.12,599 க்கு அறிமுகமாகி, பட்ஜெட்வாசிகளை இன்ப அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ள நிலையில், ரூ.9999 க்கு லாவா பிளேஸ் 2 ப்ரோ இன்னொரு இன்ப அதிர்ச்சியாக அறிமுகமாகி உள்ளது.
லாவா பிளேஸ் 2 ப்ரோ அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) கொண்ட லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் (Android 12 Out-of-box) இயங்குகிறது. மேலும் இது 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 2.5டி கர்வ்டு டிஸ்பிளே, செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது.
ஆக்டா-கோர் யூனிசாக் டி616 ப்ராசஸர் (Octa-core Unisoc T616 processor) மூலம் இயக்கப்படும் லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி ஃப்யூஷன் என்கிற தொழில்நுட்பமும் (Memory Fusion Technology) உள்ளது. இதை பயன்படுத்தி 8ஜிபி என்கிற வழக்கமான ரேம் உடன் கூடுதலாக 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம்-ஐ (Virtual RAM) சேர்க்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் இரண்டு 2-மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த லாவா ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 18W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
கனெக்டிவிட்டி (Connectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீஈ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றை பெறுகிறது. மொத்தம் 190 கிராம் எடையை கொண்டுள்ள இந்த லாவா ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை (Finger Print Sensor) கொண்டுள்ளது; கூடவே ஃபேஸ் அன்லாக்கையும் (Face Unlock) ஆதரிக்கிறது.
லாவா பிளேஸ் 2 ப்ரோ விலை மற்றும் விற்பனை: லாவாவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் கீழ் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இது ரூ9,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது: தண்டர் பிளாக் (Thunder Black), ஸ்வாக் ப்ளூ ( Swag Blue) மற்றும் கூல் கிரீன் ( Cool Green).
லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையை பொறுத்தவரை, இது சரியாக எந்த தேதியில், எந்த இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்கிற விவரங்களை லாவா நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. கூடிய விரைவில் இது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications