Home
Mobile

சூப்பர் பேட்டரி ஆற்றலை வழங்கும் பட்ஜெட் விலை மொபைல்!

By Super
சூப்பர் பேட்டரி ஆற்றலை வழங்கும் பட்ஜெட் விலை மொபைல்!

வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகில் ஒரு சூப்பர் ஃபேஷனான மொபைலை கையில் வைத்து கொண்டு உங்கள் நண்பர்கள் முன்பு வலம் வர நினைக்கிறீர்களா? அப்படி என்றால் சிக்ட் நிறுவனத்தின் (எஸ்ஐசிடி) ஐவரி மொபைல் அதற்கு ஏற்ற மொபைல் தான். இந்த மொபைலை ஐவிகே என்றும் அழைக்கின்றனர்.

இந்த மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் சிறந்த தொழில் நுட்பங்களையும் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு நிச்சயம் எல்லோரது முன்பும் தனி தன்மையாக தெரியும். ஃபர்ஸ்ட் கிளாஸ் வடிவமைப்பை கொண்ட இந்த மொபைல், 3.2 இஞ்ச் திரை வசதியை வழங்கும்.

1.3 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும் இந்த மொபைல், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது. புகைப்படமோ, வீடியோ ரெக்கார்டிங்கோ எதுவாக இருப்பினும் துல்லியமாக பெறலாம். இதில் உள்ள 2ஜிபி மெமரி வசதியினை, 16 ஜிபி வரை வேண்டுமானாலும் விருவுபடுத்தி கொள்ளலாம்.

இதன் மல்டி மீடியா வசதியினை பெற இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதியும் உள்ளது. இன்னும் இந்த மொபைல் பற்றிய ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இதில் 1,400 எம்ஏஎச் பேட்டரி வசதியை பெறலாம். குறைந்த விலையில் இவ்வளவு சிறப்பான பேட்டரியினை பெறுவது பெரிய விஷயம் தான்.

இந்த பேட்டரியின் மூலம் சிறப்பான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினையும் எளிதாக பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை ரூ.3,600 என்ற கவர்ச்சிகரமான விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X