80 நாட்கள் ஸ்டான்-பை டைமுடன் வரும் பட்ஜெட் மொபைல்!

அதிசயிக்க வைக்கும் தொழில் நுட்பங்கள் இருந்தாலும் அத்தனை வசதிகளையும் அனுபவிக்க ஆற்றல் வாய்ந்த பேட்டரி தேவைப்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க சிறந்த தீர்வை வழங்கும் ஐவி-198 பட்ஜெட் மொபைல். இது சிக்ட் நிறுவனத்தின் தயாரிப்பு.
இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதன் பேட்டரி வசதிதான். சில பேர் தொடர்ந்து மூன்று நாட்கள் கூட பயனிக்க வேண்டியது இருக்கும். இதற்காக சார்ஜ் செய்ய ப்ளக் தேடி அலைய வேண்டாம். இது போன்ற தருணத்தில் ஐவி-198 மொபைல் சிறந்த நண்பனாக இருக்கும்.
2.6 இஞ்ச் திரை வசதியை கொடுத்து விவரங்களை தெளிவாக காட்டும் ஐவி-198 மொபைல், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்குகிறது. இதன் கோமரா ஒரு நொடிக்கு 20 ஃபிரேம்களை கொடுக்கும் தொழில் நுட்பம் கொண்டது. 16ஜிபி மெமரி வசதியினை கொடுக்கும் இந்த கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டது. இதனால் 36 மணி நேரம் டாக் டைம் மற்றும் 80 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் தரும்.
அதிகமாக வெளியிடங்களுக்கு செல்பவர்களால் தொடர்ந்து சார்ஜரை பயன்படுத்த முடியாது. அந்த கவலையை போக்கும் ஆற்றல் இந்த ஐவி-198 மொபைலுக்கு இருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் போதும் 80 நாட்கள் ஸ்டான்-பை டைமினை பெறலாம். புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகளை கொண்ட இந்த சிக்ட் ஐவி-198
மொபைலை ரூ.2,600 விலையில் எளிதாக பெறலாம்.


Click it and Unblock the Notifications