சீனாக்காரன் புடிச்சிட்டான்.. இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு Flip Phone-ஆ.. ஷாக் ஆன Samsung.. மெர்சலான Moto!
ரூ.99,999க்கு கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஃபிளிப் 5 மீதோ.. ரூ.89,999க்கு கிடைக்கும் கேலக்ஸி ஃபிளிப் 4 மீதோ உங்களுக்கொரு கண் இருந்தால்.. இவ்விரு ஃபிளிப் போன்களில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டுமென்கிற ஆசை அல்லது திட்டம் உங்களிடம் இருந்தால்.. ப்ளீஸ் வெயிட்!
ஏனென்றால் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ (Tecno) வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதியன்று உலகளாவிய வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்நிகழ்வில் ஃபாண்டம் வி ஃபிளிப் (Phantom V Flip) என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இதுவொரு ஃபிளிப் போனாகும். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஃபிளிப் போன் மிட்-ரேன்ஜ் பிரிவின் கீழ் அறிமுகமாகி, பரந்த அளவிலான வாடிக்கையாளர்களை அடைவதை இலக்காக கொண்டுள்ளது. அதாவது விலை உயர்ந்த ஃபிளிப் போன்களுக்கு "ஆப்பு" அடிக்கப்போகிறது!
டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை விவரங்களை டெக்னோ நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், நம்பத்தகுந்த டிப்ஸ்டர்களில் ஒருவரான பராஸ் குக்லானி (Paras Guglani) இந்திய சந்தையில் ஃபாண்டம் வி ஃபிளிப்பின் எதிர்பார்க்கப்படும் விலை வரம்பை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
பராஸ் குக்லானியின் கூற்றுப்படி, ஃபாண்டம் வி ஃபிளிப் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.50,000 - ரூ.55,000 க்குள் என்கிற பிரிவில் அறிமுகமாகும். இது உண்மையாகும் பட்சத்தில் ஃபாண்டம் வி ஃபிளிப்பானது, மோட்டோரோலா ரேஸர் 40 (Motorola Razr 40) உடன் நேரடியாக மோதும்; சாம்சங் கேலக்ஸி ஃபிளிப் 4 (Samsung Galaxy Flip 4), ஃபிளிப் 5-ன் (Flip 5) விற்பனையை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் தொடர்பான டீஸர்கள் வெளிவரத் தொடங்கியுள்ள போதிலும், டெக்னோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது (India Launch Date) குறித்த தெளிவான தகவல் எங்களிடம் இல்லை. அதுகுறித்த தகவல் ஏதேனும் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
ஃபாண்டம் வி ஃபிளிப் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 1080 x 2460 பிக்சல்ஸ், FHD+ ரெசல்யூஷன் மற்றும் 20.5:9 ரேஷியோ உடனான 6.9-இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஹை குவாலிட்டி செல்பீக்களுக்கான சக்திவாய்ந்த 32எம்பி கேமராவை பேக் செய்கிறது.
கூடுதலாக, நோட்டிஃபிகேஷன்ஸ் மற்றும் தகவல்களை விரைவாக அணுக உதவும் 466 x 466 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 1.32 இன்ச் கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஆட்டோஃபோகஸ் (Autofocus) திறன்களை கொண்ட 64எம்பி மெயின் ரியர் கேமராவை கொண்டுள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் அல்ட்ரா-வைட் (Ultra-wide) லென்ஸுடன் 13எம்பி இரண்டாம் நிலை ரியர் கேமராவும் உள்ளது. டெக்னோ நிறுவனத்தின் இந்த புதிய ஃபிளிப் போனில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) வழியாக பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் 4,000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் போன் ஆனது டைமன்சிட்டி 8050 (Dimensity 8050) சிப்செட் மூலம் இயக்கப்படுதாக கூறப்படுகிறது, இது உண்மையாகும் பட்சத்தில், வலுவான செயல்திறனில் எந்த குறையும் இருக்காது. இது தாராளமான 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் வைஃபை 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3 மற்றும் 14 வெவ்வேறு 5G பேண்டுகளுக்கான ஆதரவுடன் 5ஜி கனெக்டிவிட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஹைஓஎஸ்13 (HiOS 13) உடன் வரும்.


Click it and Unblock the Notifications








