ஷார்ப் நிறுவனத்தின் கண்டுபிடிப்பாக புதிய ஸ்மார்ட்போன்!

தொழில் நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜப்பான் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. எந்த ஒரு தொழில் நுட்ப சாதங்களுமே இந்தியாவில் வெளியாகுமா என்று யோசிப்பதைவிட, அந்த தொழில் நுட்பத்தினை பற்றி தெரிந்து கொள்வது நல்ல விஷயம் தானே.
இங்கே ஷார்ப் நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும், இந்த ஸ்மார்ட்போனை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வழங்கும்.
இதில் 320 X 480 திரை துல்லியத்தினையும் பெற முடியும். மற்றும் ஆன்ட்ராய்டு 2.3.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க 600 மெகாஹெர்ட்ஸ் கியூவல்காம் எம்எஸ்எம்7225ஏ பிராசஸரின் உதவியும் உண்டு.
கேமரா பற்றிய தகவல்கள் மிக முக்கியமானவையே. இந்த ஸ்மார்ட்போனில் 3.1 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெற முடியும்.
இதன் 16 ஜிபி இன்டர்னல் வசதி தேவையான ஸ்டோரேஜ் வசதிக்கு பெரிதும் வழி வகுக்கும். அதே போல பிரவுசிங் போன்ற தொழில் நுட்பத்திற்கு ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெற முடியும்.
அதோடு 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக சப்போர்ட் செய்யும். பொழுதுபோக்கு அம்சம் தொடங்கி, வேலை பளுவை குறைக்கும் உயர்ந்த தொழில் நுட்பம் வசதி வரைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக பயன்படுத்தலாம்.
அதிக நேரம் பயன்படுத்த சிறப்பாக சப்போர்ட் செய்ய இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1,200 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும்? இதன் விலை என்ன? என்பது போன்ற தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications