சகல வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: ஷார்ப் அறிமுகம்

Posted By: Karthikeyan
சகல வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: ஷார்ப் அறிமுகம்

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஷார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எஸ்எச்-06டி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் உயர்தர வகுப்பை சார்ந்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரையை கொண்டிருக்கும். அதிக துல்லியத்துடன் கெப்பாஸிட்டிவ் டச் ஸ்கிரீனுடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு வி2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ9 டியூவல் பிராசஸர் பொருத்தப்பட்டிருப்பதால் செயல் திறனில் படுவேகமாக இருக்கும்.

வீடியோ காலிங் வசதிக்காக 0.3 மெகாபிக்ஸல் கொண்ட அடிப்படை முகப்பு கேமராவும், லெட் ப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்ஸல் திறன் கொண்ட பின்புற கேமராவும் இருக்கிறது.

8 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை சேமிப்பு வசதியை கூட்டிக்கொள்ள முடியும். மைக்ரோ எஸ்டி மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி ஆகிய மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்யும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ், 2ஜி, 3ஜி, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், ஆன்ட்ராய்டு பிரவுசர் என சகல இணைப்பு வசதிகளையும் இது கொண்டிருக்கிறது. ஆனால், 4 ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யாது.

அனைத்து பார்மெட் கொண்ட ஆடியோ பைல்களையும் இதில் ப்ளே செய்து கேட்டு மகிழலாம். மல்டி பார்மெட் வீடியோ ப்ளேயர் வசதியும் இருக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருப்பதால் கூடுதல் ஸ்பீக்கர்களையும் இணைத்து பாடல்களை கேட்க முடியும்.

எப்எம் ரேடியோ வசதியும் இருக்கிறது. இதில், ஸ்டான்டர்டு லித்தியம் அயான் பேட்டரி இருக்கிறது. இந்த பேட்டரி 7 மணி நேர டாக்டைம் வசதியை வழங்கும். இதன் விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்