பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன் ஒன்றுடன் மீண்டும் சந்தைக்குள் - ஷார்ப் நிறுவனம்.!

|

சீனாவில் ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்பும் நோக்கில் ஷார்ப் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று பெய்ஜிங்கில் ஷார்ப் அக்வாஸ் எஸ் 2 (SHARP AQUOS S2) ஏன அதன் முழு திரை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சாதனம் 14 ஆகஸ்ட் முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன் ஒன்றுடன் மீண்டும் சந்தைக்குள் - ஷார்ப் நிறுவனம்

ஷார்ப் நிறுவனத்தால் தொடங்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ஃப்ரீ பஃரம் வெயிட் டிஸ்ப்ளே (FFD) தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஷார்ப் ஆக்வாஸ் எஸ்2 சாதனத்தின் திரை-உடல் விகிதத்தை 84.95 சதவிகிதம் வரை கொண்டுசெல்லும். நிறுவனத்தின் படி, எப்எப்டி தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன் அதன் திரையில் கீழ் கேமரா மற்றும் ரிசீவர் கொண்டு வரும்.

இந்த இடத்தில மி மிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90 சதவிகிதம் திரை-உடல் விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"இந்த முழு திரை வடிவமைப்பின் முக்கிய காரணமே தொழில்நுட்ப வரம்பை மீறுவதே ஆகும். கருவியின் அளவானது கையிகளில் அதன் இருப்பு மற்றும் காட்சி வசதி ஆகிய இரண்டையும் அடையவும், பயனர்களுக்கு ஓர் இறுதி அனுபவத்தை வழங்கவும் உறுதி செய்யும்" என்று ஷார்ப் நிறுவனத்தின் சிஇஓ டாக்டர் லுவோ ஸோங்செங் கூறியுள்ளார்.

ஷார்ப் நிறுவனம் இக்கருவியின் அம்சங்கள் சார்ந்த எந்தவிதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்றாலும் கூட இக்கருவி, 5.5 அங்குல பெஸல்லெஸ் திரை கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சாதனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்.

கடந்த 2013-ஆம் ஆண்டு உலகின் முதல் 'முழு திரை' தொலைபேசி ஒன்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது என்பது எட்ஜ்எஸ்டி-302 எஸ்எச் (EDGEST-302SH) ஆனது 80.5% திரை-உடல் விகிதம் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் உலகின் முதல் மொபைல் போன் உள்ளமைக்கப்பட்ட கேமராவை கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sharp to launch a 'full screen' smartphone in china, to go on sale on 14 August. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X