பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.!
ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஜப்பான் சார்ந்த ஷார்ப் நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 16-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போன் மாடல்.

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 :
ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16செல்பீ ரியர் கேமரா:
இந்த ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் 12+13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3110எம்ஏஎச்:
ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் 3110எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications