Home
Mobile

ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

ஜப்பனீஸ் நிறுவனமான ஷார்ப் தற்சமயம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு வரும் மார்ச் 28-ம் தேதி அன்று வியட்நாம் பகுதிகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.!

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த அக்வாஸ் எஸ்3 சாதனம் வெளிவந்துள்ளது.

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஒஎஸ் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஷார்ப் அக்வாஸ் எஸ்3 சாதனம்.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.!

வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.26,000-ஆக உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும்.

Best Mobiles in India

English summary
Sharp Aquos S3 With Android Oreo and Snapdragon 630 SoC Goes Official ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X