பொசுக்குன்னு Flipkart-க்கு வந்த Nothing Phone 2.. இந்த முறை கண்டிப்பா மிஸ் ஆகாது போலயே!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள், இந்த பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போன்.. அதாவது நத்திங் போன் 2 (Nothing Phone 2) எப்போது அறிமுகமாகும் என்று "வழி மேல் விழி வைத்து காத்திருக்கும்" நிலையில், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் சைலன்ட் ஆக பிளிப்கார்ட்டிற்கு (Flipkart) வந்துள்ளது.
இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் (Most Expected Smartphone in 2023) ஒன்றான நத்திங் போன் 2, பிரபல இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட் வழியாக 'டீஸ்' செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நத்திங் போன் 2-வின் இந்திய அறிமுகமானது நாம் எதிர்பார்ப்பதை வேகமாக நடக்கும் என்பதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.

பிளிப்கார்ட் டீஸர் (Flipkart Teaser) வழியாக என்னென்ன விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது? வெளியான டீஸரில் "போன் 2 பிரீமியம்" (Phone 2 Premium) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இது நத்திங்கின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கும் மற்றும் நத்திங் போன் 1 (Nothing Phone 1) உடன் ஒப்பிடும்போது சில நல்ல மேம்படுத்தல்களை பெறும் என்று (குறிப்பாக ஹார்ட்வேரில்) சொல்லாமல் சொல்கிறது.
இதுதவிர்த்து பிளிப்கார்ட்டின் டீஸர் வழியாக வேறு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அது நத்திங் போன் 2-வின் டிசைனை வெளிப்படுத்தும் எந்த புகைப்படத்தையும் காட்சிப்படுத்தவில்லை. இருப்பினும் நத்திங் போன் 2-வானது நத்திங் போன் 1-ல் பயன்படுத்தப்பட்ட கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph interface) மற்றும் டிரான்ஸ்ப்ரென்ட் டிசைனை (Transparent design) தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 2-வில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 800 சீரீஸ் (Snapdragon 800 series) சிப்செட் உடன் வரும் என்பதை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது தவிர்த்து நத்திங் போன் 2-வின் அம்சங்கள் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.
நத்திங் போன் 2-வின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் 1 ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு கோடையில் தான் அறிமுகமானது. ஆக நத்திங் போன் 2 மாடலானது 2023 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 1 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 1 ஆனது 6.55-இன்ச் அளவிலான 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) சப்போர்ட் உடனான அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778ஜிபிளஸ் சிப்செட், 50எம்பி + 50எம்பி கேமரா செட்டப் மற்றும் 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








