ஜன.19 முதல் நோக்கியாவின் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன்கள்.!

நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - பெரிய அளவில் தேடப்படும் ஒரு சாதனமாக இருப்பினும் நிறுவனத்தின் முதல் முயற்சி என்பதால், அது ஒரு சாதாரண வன்பொருள் கொண்டே தொடங்கப்பட்டது.

|

நோக்கியா கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், சமீபத்தில் தொடர்ச்சியான முறையில் புதுப்பிக்கப்பட்ட நோக்கியா கருவிகளை அறிமுகம் செய்தது.

ஜன.19 முதல் நோக்கியாவின் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன்கள்.!

கடந்த 2016 டிசம்பரில் எச்எம்டிகுளோபல் நிறுவனம், ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, ஜனவரி 2017-ல் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முதல் சாதனமாக சந்தையில் களமிறக்கப்பட்டது.

முதல் முயற்சி

முதல் முயற்சி

ஆரம்பத்தில், நோக்கியா 6 ஆனது சீன சந்தையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எம்டபுள்யூசி 2017 நிகழ்விற்கு பின்னர் நோக்கியா 6 உலகளாவிய சந்தைகளை எட்டியது; எதிர்பார்த்த வெற்றியையும் அடைந்தது. நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - பெரிய அளவில் தேடப்படும் ஒரு சாதனமாக இருப்பினும் நிறுவனத்தின் முதல் முயற்சி என்பதால், அது ஒரு சாதாரண வன்பொருள் கொண்டே தொடங்கப்பட்டது.

உகந்ததாக இல்லை

உகந்ததாக இல்லை

குறிப்பாக அதன் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி செயலியானது நோக்கியா 6 ஸ்மார்ட்போனிற்கு உகந்ததாக இல்லை என்றே கூறலாம். இதனை மனதிற்கொண்ட எச்எம்டி குளோபல் நிறுவனம் வருகிற 2018-ஆம் ஆண்டில் நோக்கியா 6-ன் இரண்டாம் தலைமுறை மாறுபாட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.

நோக்கியா 6 (2018) என்கிற பெயரில்

நோக்கியா 6 (2018) என்கிற பெயரில்

கூறப்படும் அடுத்த நோக்கியா 6 ஆனது நோக்கியா 6 (2018) என்கிற பெயரில், நோக்கியா 9 ஸ்மார்ட்போனுடன் இணைந்து ஜனவரி 2018-ல் அறிமுகப்படுத்தும் என்று ஒரு புதிய லீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது. வெளியான தகவலானது, வருகிற ஜனவரி 19 ஆம் தேதியன்று சீனாவில் நடைபெறும் நிகழ்வொன்றில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் என்கிறது.

சிறப்பான பகுதி

சிறப்பான பகுதி

அந்த நிகழ்வின் சிறப்பான பகுதி என்னவென்றால் அக்கருவிகள் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்டில் இருந்து ஒரே தாவலாக ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி செயலிக்கு மாறுகிறது. இந்தவொரு பிரதான மாற்றமே, நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விற்பனையை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இரட்டை சிம் ஆதரவு

இரட்டை சிம் ஆதரவு

ஒரு அறியப்படாத நோக்கியா மாதிரியானது ஆன்லைனில் காணப்பட்டு, அது நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் தான் என்று கூறும் இந்த அறிக்கை உண்மை என நம்பினால், நோக்கியா 6 (2018) ஆனது இரட்டை சிம் ஆதரவு, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுவரும்.

முழு எச்டி+ டிஸ்ப்ளே

முழு எச்டி+ டிஸ்ப்ளே

மேலும் கூறப்படும் நோக்கியா 6 (2018) கருவியில் முழு எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும், இருப்பினும் அது வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றாது. ஏனெனில் நோக்கியா 6 - ஒரு இடைப்பட்ட தொகுப்பில் சிறந்த வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

மேலும், இக்கருவியின் முழு எச்டி+ டிஸ்பிளே காரணமாக, இதன் கைரேகை சென்சார் தொலைபேசியின் பின்னால் நகர்த்தப்படலாம். இவை அனைத்தும் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், அதன் பின்னரே இவைகள் அதிகாரப்பூர்வமான தகவல்களாகும்.

இந்திய வெளியீடு

இந்திய வெளியீடு

நோக்கியா 6 (2018) ஆனது ஜனவரி 19 அன்று தொடங்கலாம், ஆனால் அதன் உலகளாவிய மாறுபாடானது, எம்டபுள்யூசி 2018-ல் தான் வெளிவரும். அதாவது, 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் தான் இந்திய வெளியீடு நடக்கலாம்.

Best Mobiles in India

English summary
Second Generation Nokia 6 Might Be Powered by the Snapdragon 660 SoC; Expected to Launch in January 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X