ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!

|

ரூ.10,000 என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை தேடும் அனைவரின் கண்களுமே.. இன்று (அக்.19) இந்தியாவில் அறிமுகமான ஒரு புதிய பட்ஜெட் விலை போனின் மீதே உள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? பட்ஜெட் வாசிகளின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு இந்த Phone என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அது ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் ஆகும்!

அது ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் ஆகும்!

ஒப்போ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான ஏ சீரீஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சேர்த்துள்ளது. அது ஒப்போ ஏ17கே (Oppo A17k) ஆகும்.

இது கடந்த 2022 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A17 ஸ்மார்ட்போனின் "மலிவான மாற்று" ஆகும். அதாவது, ஒப்போ ஏ17கே மாடலின் விலை நிர்ணயம் ஆனது ஒப்போ ஏ17 மாடலை விட குறைவாக உள்ளது!

இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

இது பட்ஜெட் வாசிகளை ஈர்க்க என்ன காரணம்?

இது பட்ஜெட் வாசிகளை ஈர்க்க என்ன காரணம்?

ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டின் கீழ் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் பட்ஜெட் வாசிகள் ஒப்போ ஏ17கே மாடலால் ஈர்க்கப்பட்டால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!

ஏனென்றால், இது ஒப்போ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் - வழக்கம் போல - விலையை மீறிய சில அம்சங்களை பேக் செய்கிறது!

பெரிய டிஸ்பிளேவுடன் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்!

பெரிய டிஸ்பிளேவுடன் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்!

ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது HD+ ரெசல்யூஷனை வழங்கும் 6.56-இன்ச் அளவிலான IPS LCD டிஸ்பிளேவை பேக் செய்கிறது.

மேலும் இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (60Hz Refresh rate) வழங்குகிறது மற்றும் 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (600 nits Peak Brightness) உடன் வருகிறது.

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

1டிபி வரை ஸ்டோரேஜ்!

1டிபி வரை ஸ்டோரேஜ்!

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையில் நிறுவனத்தின் சொந்த ColorOS 12.1 கொண்டு இயங்கும் ஒப்போ ஏ17கே ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

3GB ரேம் மற்றும் 64GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனின் மெமரியை, எஸ்டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கவும் முடியும்!

முன்னாடி ஒன்னு.. பின்னாடி ஒன்னு!

முன்னாடி ஒன்னு.. பின்னாடி ஒன்னு!

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5MP செல்பீ கேமரா உள்ளது. பின்புறத்தில், 8MP சிங்கிள் ரியர் கேமரா உள்ளது.

ரூ.10,000 என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் மற்ற சில ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ள நிலைப்பாட்டில், ஒப்போ ஏ17கே-வின் சிங்கிள் ரியர் கேமரா செட்டப், உங்களில் சிலரை ஏமாற்றம் அடைய செய்யலாம்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

போதுமான.. நல்ல பேட்டரி!

போதுமான.. நல்ல பேட்டரி!

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் - குறையே சொல்ல முடியாத - ஒரு 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மேலும் IPX4 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டென்ட் திறனை கொண்டது!

ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போனின் விலை:

ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போனின் விலை:

ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போனின் விலை ரூ 10,499 ஆகும். இது 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜின் விலை நிர்ணயம் ஆகும்.

இது சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும். மேலும் கலர் ஆப்ஷன்களும் குறைவாகவே உள்ளன - ப்ளூ மற்றும் கோல்ட்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

இதை வாங்காமல் ஒப்போ ஏ17-ஐ வாங்கலாமா?

இதை வாங்காமல் ஒப்போ ஏ17-ஐ வாங்கலாமா?

தாராளமாக வாங்கலாம்! ஆனால் கொஞ்சம் அதிகமான செலவு செய்ய வேண்டி இருக்கும். ஏனென்றால் Oppo A17 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.12,499 ஆகும்.

இது 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜின் விலை ஆகும். இதுவும் இரண்டு கலர் ஆப்ஷன்களில் மட்டுமே வாங்க கிடைக்கும்.

ஒப்போ ஏ17 என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

ஒப்போ ஏ17 என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- 6.56 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே
- 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
- நிறுவனத்தின் சொந்த ColorOS 12.1.1 ஓஎஸ்
- மீடியாடெக் ஹீலியோ G35 ஆக்டா-கோர் ப்ராசஸர்
- 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்
- 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

Best Mobiles in India

English summary
Searching for latest budget price smartphone to buy in India Check out all new oppo A17k

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X