விலை கம்மியா இருக்கணும்.. ஆனா கேமரா வெயிட்டா இருக்கணுமா? அப்போ இந்த 5 போன்கள் தான் பெஸ்ட்டு!
கொடுக்குற காசுக்கும்.. அதுல இருக்குற கேமரா செட்டப்புக்கும் சம்மந்தமே இல்லாத அளவுக்கு ஒரு வெயிட்டான கேமரா போனை தேடுறீங்களா? அப்போ சரியான இடத்துக்கு தான் வந்துருக்கீங்க! ஏனென்றால், ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் டாப் 5 கேமரா போன்களின் (Camera Phones) பட்டியல் இதோ!
01.ரியல்மி 10 ப்ரோ 5ஜி (Realme 10 Pro 5G)
ரூ18,999 க்கு வாங்க கிடைக்கும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி, மிகவும் மலிவான விலைக்கு 108எம்பி கேமராவை வழங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இதிலுள்ள பெரிய சென்சார் இதன் ஒரு திறமையான கேமரா போனாக மாற்றுகிறது. மேலும் இது 16எம்பி செல்பீ கேமராவையும் பேக் செய்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.20கே பட்ஜெட்டில் கிடைக்கும் பெஸ்ட் கேமரா போன்களில் இதுவொரு படி மேலே நிற்கிறது!

02. ஸம்ஹாம்ஜி கேலக்ஸி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G)
ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி-இல் குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இந்த விலைப்பிரிவில் 4 கேமராக்களை கொண்ட போனை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம் தான். இதில் 50எம்பி ப்ரைமரி ஷூட்டர், 5எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் இரண்டு 2எம்பி சென்சார்கள் உள்ளன. இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட், நைட் மோட் மற்றும் பல ஷூட்டிங் மோட்களும் உள்ளன. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
03. ஒப்போ ஏ78 5ஜி (Oppo A78 5G)
ரூ.19,300 க்கு வாங்க கிடைக்கும் ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி + 2எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, போர்ட்ரெய்ட் மோட்-ஐ ஆதரிக்கும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது நைட் மோட், வீடியோ, போர்ட்ரெய்ட் எக்ஸ்பெர்ட், பனோரமிக் மற்றும் பல ஷூட்டிங் மோட்களையும் கொண்டுள்ளது.
04. ரெட்மி நோட் 11 ப்ரோ (Redmi Note 11 Pro)
ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும் ரெட்மி நோட் 11 ப்ரோவும் கூட 108எம்பி மெயின் கேமராவுடன் வரும் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 108எம்பி + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தை பொறுத்தவரை 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
05. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)
ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி + 2எம்பி + 2எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ப்ரைமரி கேமரா வழியாக எடுக்கப்படும் புகைப்படங்களின் தரம் நன்றாக உள்ளது. மேலும் இது சில ஷூட்டிங் மோட்களையும் (Shooting Modes) கூட வழங்குகிறது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications








