இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!

|

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன்களில் (iPhone) மட்டுமே கிடைக்கும் ஒரு முக்கியமான அம்சமானது, சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் வர உள்ளது!

அதென்ன அம்சம்? அந்த அம்சம் எந்தெந்த Samsung ஸ்மார்ட்போன்களுக்கு வரும்? அதனால் என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சில மாதங்களுக்கு முன்பு!

சில மாதங்களுக்கு முன்பு!

ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான செய்த ஐபோன் 14 சீரீஸில் (iPhone 14 Series) மிகவும் முக்கியமான மற்றும் பிரத்யேகமான ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

அது - சாட்லைட் கனெக்டிவிட்டி (Satellite Connectivity) என்கிற அம்சம் ஆகும். இந்த அம்சம் தற்போது உலகம் முழுவதும் - பல சந்தைகளில் - உள்ள ஐபோன் பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

இந்த சாட்லைட் கனெக்டிவிட்டி அம்சத்தால் என்ன பயன்?

இந்த சாட்லைட் கனெக்டிவிட்டி அம்சத்தால் என்ன பயன்?

உங்கள் பகுதியில் செல்லுலார் நெட்வொர்க்குகள் (Cellular networks) நம்பகத்தன்மையற்றதாக இருக்கும் போது அல்லது கிடைக்காத போது இந்த சாட்லைட் கனெக்டிவிட்டி அம்சம் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்!

செல்லுலார் நெட்வொர்க் கிடைக்காத அவசரமான நேரங்களில் / சூழ்நிலைகளில், செயற்கைக்கோள் வழியாக அணுக கிடைக்கும் கனெக்டிவிட்டியை பயனர்களால் பெற முடியம்!

நேற்றுவரை ஐபோன்களில்.. இனி சாம்சங் போன்களில்!

நேற்றுவரை ஐபோன்களில்.. இனி சாம்சங் போன்களில்!

தற்போது வரையிலாக ஐபோன் 14 சீரீஸ் மாடல்களில் மட்டுமே அணுக கிடைக்கும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சமானது கூடிய விரைவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்23 சீரிஸில், சாட்லைட் கனெக்டிவிட்டி அம்சம் இடம்பெறலாம்!

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

இதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால்?

இதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால்?

ஆப்பிளின் ஐபோன் 14 சீரீஸில் அணுக கிடைக்கும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சமானது, குளோபல்ஸ்டார் (Globalstar) வழியாக அணுக கிடைக்கிறது மற்றும் இதை அவசரநிலைகளில் (Emergency time) மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆனால் சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரீஸ் உள்ள சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சமானது வெறுமனே அவசரநிலைக்கு மட்டுமே அணுக கிடைக்காமல், மேலதிக விஷயங்களுக்கும் பயன்படுத்த முடியும்படி இருக்கும் என்றும் கூறப்படுகிறது!

இதுமட்டும் தானா என்று கேட்டால்.. இல்லவே இல்லை!

இதுமட்டும் தானா என்று கேட்டால்.. இல்லவே இல்லை!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது சாட்லைட் கனெக்டிவிட்டி என்கிற ஒரே ஒரு முக்கியமான அம்சம் மட்டுமே இடம்பெற போவதில்லை!

ஏனென்றால் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் மாடல்களில் புதிய கேமரா சென்சார்கள், புதிய ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், லேட்டஸ்ட் Qualcomm சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) போன்ற அம்சங்களும் இடம்பெறலாம்.

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

கேலக்ஸி எஸ்23 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்?

கேலக்ஸி எஸ்23 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்?

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸின் கீழ் - வழக்கம் போல - சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23), சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) என மொத்தம் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்!

அதில் எஸ்23 அல்ட்ரா மாடல் ஆனது மிகவும் மேம்பட்ட அம்சங்களை பேக் செய்யும். சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி இந்த அல்ட்ரா மாடல் ஆனது 960ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (Touch Sampling Rate) உடனான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம்.

கேலக்ஸி எஸ்23 சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகமாகும்?

கேலக்ஸி எஸ்23 சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகமாகும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Samsung Galaxy S23 சீரிஸ் ஆனது ரூ.70,000 முதல் என்கிற பட்ஜெட்டின் கீழ் வெளியாகலாம். இந்த சீரீஸின் கீழ் வரும் அல்ட்ரா மாடல் ஆனது ரூ.1 லட்சம் என்கிற புள்ளியை கூட எட்டலாம்!

Best Mobiles in India

English summary
Satellite connectivity feature only available in Apple iPhone 14 Now coming to Samsung Galaxy S23

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X