Home
Mobile

கலக்கல் தொழில் நுட்பத்துடன் மோட்டோ, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

By Super
கலக்கல் தொழில் நுட்பத்துடன் மோட்டோ, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

சிறந்த ஸ்மார்ட்போன்களை கொடுத்து கொண்டு இருக்கும் சாம்சங் மற்றும் மோட்டோரலா நிறுவனங்களின் படைப்புகளில் இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு இங்கே. மோட்டோரோலா டெஃபி மினி மற்றும் சாம்சங் எக்ஸ்கவர் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டது.

எக்ஸ்கவர் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் ஓஎஸ் சிறப்பாக இயங்க 800 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட மார்வெல் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி டெஃபி மினி

ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த ஆன்ட்ராய்டு ஓஎஸ் இருந்தால் நிறைய புதிய அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு ஸ்டோர்களில் இருந்து எளிதாக

டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதனால் புதிய புதிய அப்ளிக்கேஷன்களை இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் மூலமும் பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் ஸ்மார்ட்போன் 3.65 இஞ்ச் அகன்ற திரை வசதியை கொடுக்கும். மோட்டோரோலா டெஃபி மினி ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. இதில் டிஎப்டி தொழில் நுட்பமும் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 3.15 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டது. எக்ஸ்கவர் ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா இல்லை. ஆனால் மோட்டோரோலா டெஃபி மினி ஸ்மார்ட்போனில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது.

பிரவுசிங் வசதியை பெற இந்த ஸ்மார்ட்போன்களில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்தனையும் பெற முடியும். டெஃபி மினி, எக்ஸ்கவர் ஸ்மார்ட்போன்கள் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும்.

இனிமையான பொழுதுபோக்கிற்கு இதன் ஆடியோ மற்றும் வீடியோ வசதி சிறப்பாக சப்போர்ட் செய்யும். எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் பவர் மேனேஜ்மெண்ட் செய்ய சிறப்பாக வேலை செய்யும் பேட்டரி மிக அவசியம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1500 எம்ஏஎச் பேட்டரியும், எல்ஐ-அயான் 1650 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. இந்த பேட்டரி 3ஜி நெட்வொர்க் இயங்க சிறப்பாக துணை புரியும்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் ஸ்மார்ட்போன் ரூ.20,000 விலைக்குள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா டெஃபி மினி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. ஆனால் மோட்டோ டெஃபி மினி ஸ்மார்ட்போனின் விலை, எக்ஸ்கவர் ஸ்மார்ட்போனையும் விட குறைவாகத்தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X