Home
Mobile

கூடுதல் வசதிகளுடன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங்

By Super
கூடுதல் வசதிகளுடன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங்
ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு அரிய பல தொழில் நுட்பங்களை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சாம்சங் நிறுவனமும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை மக்களுக்குக் கொடுப்பதில் சிறிதும் பின்தங்குவதில்லை.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு போட்டியாக கூடுதல் வசதிகளுடன் புதிய படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது.

அதிக அளவில் ஆன்ட்ராய்டு மொபைல்களை சாம்சங் வெளியிட்டாலும், அதன் சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமான படா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல்களுக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் உள்ளது. குறிப்பாக, சாம்சங் வேவ் மொபைலுக்கு மக்களிடையே உள்ள வரவேற்பே இதற்கு சான்று.

அனைவராலும் விரும்பத்தக்க வகையில் படா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் மொபைலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க சாம்சங் நிறுவனம் பெரிய முயற்சியை எடுத்து வருகிறது என்ற சாம்சங் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லீ ஹூ சூ தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் இன்றைய தினத்தில் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைலை வாங்க மக்கள் திறளாக குவிந்து கொண்டிருக்கின்றனர். மல்டி டாஸ்கிங் வசதி, மொமன்டம் ஸ்க்ரோலிங், நோட்டிஃபிக்கேஷன் பார், டைடில் பார் போன்ற வசிதகளைக் கொண்ட புதிய படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X